ஆக்கிரமிப்பு அதிகாரிகள் 3 பேரை சுட்டுக் கொலை!

மக்மூத் அப்பாசின் பாதுகாவலர் நடத்திய தாக்குதல்…
3 ஆக்கிரமிப்பு ராணுவ அதிகாரிகள் பலி…
கடந்த 10 மாதங்களாகவே மேற்குகரை மீது கடும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இதுவரை 670 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனிடையே கடந்த 3 நாட்களில் 3 தாக்குதல்களை பாலஸ்தீனியர்கள் நடத்தியுள்ளனர். வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை கொண்டு சென்று தாக்குதல் நடத்த முயன்றனர். இதில் 3 இஸ்ரேலிய ராணுவத்தினர் காயம் அடைந்துள்ளனர். அதே நேரம் தாக்குதல் நடத்த முயன்ற 2 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
மற்றொரு தாக்குதலில், ஹமாஸை சேர்ந்த, ஒருவர் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், 3 பேர் காயம் அடைந்தனர். அதில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை துப்பாக்கி ஏந்திய பாலஸ்தீனியர் ஒருவர், காரில் சென்று கொண்டிருந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ராணுவ அதிகாரிகள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ஒரு பெண் ராணுவ அதிகாரி உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் தாக்குதல் நடத்தியவரின் விபரத்தை ஆக்கிரமிப்பு ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் இந்த துல்லிய தாக்குதலை நடத்தியவரின் பெயர் முகன்னத் அல் அஸ்வாத் என்றும் இவர் பாலஸ்தீன் போராளிக்குழுவான பத்தாவின் உறுப்பினர் என்றும், பாலஸ்தீன் அதிபர் மக்மூத் அப்பாசின் பாதுகாவலர்களில் ஒருவராக இருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹெப்ரானில் ஒரு கட்டித்திற்குள் இவர் இருந்த நிலையில், பல மணி நேரமாக சண்டையிட்டு, அவரை ஆக்கிரமிப்பு படைகள் கொன்றுள்ளன.
மேற்கு கரையில் கடந்த சில மாதங்களாக பாலஸ்தீனியர்கள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலியர்கள் 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
==========