உலகம்

கவலைக்கிடமான நிலையில் வடக்கு எல்லை!

ஆக்கிரமிப்பு ராணுவ தலைமையகங்கள் துவம்சம்!
வியாழக்கிழமை 8 முக்கிய நடவடிக்கைகள்…

வியாழக்கிழமை ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் 8 இலக்குகளை தாக்கியுள்ளதாக லெபனான் போராளிக்குழுவான ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. அவற்றை பார்க்கலாம்.
ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் ரமோட் நஃப்தாலி பசாறை மீது ஆள் இல்லா விமானத் தொகுப்புகள் மற்றும் கிராட் ராக்கெட் மூலம் குறிவைத்து, இலக்குகளை துல்லியமாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் அல் ஷக்ல் படைப்பிரிவு தலைமையகம் மீது ஆள் இல்லா விமானங்கள் மூலம் நடத்திய வான் வழித் தாக்குதலில், தங்களது ஆயுதம் இலக்கை நேரடியாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் 300வது மேற்கு படைப்பிரிவு ராணுவ தலைமையகம் மீது ஆள் இல்லா விமானத் தொகுப்பு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அல் தஹ்யாத் மலைப்பகுதியில் குழுமியிருந்த ஆக்கிரமிப்பு ராணுவத்தினர் மீது, ராக்கெட்டுகளை ஏவியதில், தங்களது ஆயுதம் இலக்கை நேரடியாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல் மலிக்கியா ராணுவ தளம் மீது ஆர்டிலரி ஷெல்ஸ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ருவைஷத் அல் ஆலம் ராணுவ தளம் மீது ராக்கெட் தொகுப்புகள் மூலம் இலக்குகள் நேரடியாக தாக்கப்பட்டுள்ளன. பில்கட் ரிஷா தளத்தில் உளவுக் கருவிகளை குறிவைத்து தகுந்த ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஹனிடா ராணுவத் தளம் மீது ஆர்டிலரி ஷெல்ஷ்கள் மூலம் இலக்குகள் நேரடியாக தாக்கப்பட்டுள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லாவின் இந்தத் தாக்குதல்களால் வடக்கு எல்லையில் உள்ள பல நகரங்களில் தொடர்ந்து அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே “பலவீனமான” இஸ்ரேல் அரசு வடக்கு பகுதியை “மறந்து விட்டதாக” ஆக்கிரமிப்பு ஊடகமான சேனல் 12 விமர்சித்துள்ளது.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button