உலகம்

பிரான்சின் புதிய பிரதமர் – தீவிர இஸ்ரேல் எதிர்ப்பாளர்! “இனி எதிர்காலம் இல்லை” என யூதர்கள் அச்சம்!

பிரான்சு தேர்தலில் முதலிடம் பிடித்த காசா ஆதரவு கட்சிகள்…
தனி பாலஸ்தீன் நாடு உருவாக்கப்படும் என அறிவித்த பிரதமர் வேட்பாளர்…
பிரான்சில் இனி பாதுகாப்பில்லை என அச்சம் தெரிவிக்கும் யூத மதகுருக்கள்…

நாங்கள் 50, 60 ஆண்டுகளாக பிரான்சில் வாழ்ந்து விட்டோம். ஆனால் இனி இங்கு யூதர்களுக்கு எதிர்காலம் இல்லை. இளைய தலைமுறை யூதர்களின் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுகிறோம், அவர்கள் இங்கிருந்து இஸ்ரேலுக்கு இடம்பெயர்வது தான் சரியாக இருக்கும். இவ்வாறு டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார், Rabbi எனப்படும் பிரான்சு யூத மத குருவான Moshe Sebbag.

பிரான்சு தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், யூதர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த அச்சத்திற்கு காரணம் தீவிர இடது சாரித் தலைவரான Jean-Luc Melenchon என்பவரின் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது தான்.

தர்களிடையே பிரான்சில் நடந்து முடிந்துள்ள தேர்தல் நியூ பாப்புலர் ஃப்ரண்ட் என்ற 3 முக்கிய இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அங்கு யூதர்களுக்கு ஆதரவான தீவிர வலதுசாரிகள் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் தலைகீழாக அமைந்துள்ளன. தற்போதைய அதிபர் இமானுவேல் மேக்ரானின் மய்யம் கட்சி, 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

எனினும் மொத்தம் உள்ள 577 இடங்களில் பெரும்பான்மைக்கு 289 இடங்கள் தேவை. ஆனால் இடதுசாரிகூட்டணி 182 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. யார் யாருடன் கூட்டணி வைக்கப்ப போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எனினும், தற்போது பிரதமர் வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் இடதுசாரி கட்சித் தலைவரான Jean-Luc Melenchon. இவரைக் கண்டு தான் இஸ்ரேல் மிகப்பெரிய அளவில் அஞ்சுகிறது. காரணம் என்ன என்று பார்க்கலாம்.
தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே அவரது முதல் வெற்றி உரையில் அவர் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்போம் என அறிவித்தார்.

காசா தொடர்பாக அவர் இதற்கு முன்பு தெரிவித்த கருத்துக்கள் இஸ்ரேலை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளன. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அவர் பல தருணங்களில், சர்வதேச ஊடகங்கள் முன்பு மிகவும் விரிவாக பட்டியலிட்டுள்ளார்.

அவரது பேட்டியை முழுவதுமாக படிக்க…

“நெதன்யாகுவின் நடவடிக்கை தற்காப்பு அல்ல. இனப்படுகொலை” – பிரான்சு பிரதமர் வேட்பாளர்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button