உலகிலேயே மிக மிக விலையுயர்ந்த ரத்தம் – எந்த உயிரினத்தோடது தெரியுமா?

மனித வாழ்க்கைக்கு அவசியமான தனித்துவமான பண்புகளைக் கொண்ட உயிரினங்களைப் பற்றி நாம் அவ்வப்போது கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் டைனாசருக்கு முன்பிருந்தே வாழ்த்து வரும் ஒரு உயிரினத்தின் ரத்தம் மனிதனின் மருத்துவ தேவைக்காக லட்சங்களைக் கொட்டிக்கொடுத்து வாங்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
நீல நிறத்தில் ரத்தத்தைக் கொண்ட குதிரைலாட நண்டு தான் அது. ஜிங்க் சார்ந்த சுவாச நிறமியான ஹீமோசயனின் இருப்பதால், அதன் ரத்தம் நீல நிறத்தில் உள்ளது. இந்த நண்டுகள் மிகவும் மதிப்புமிக்கவை.
ஏனெனில் அவற்றின் விலையுயர்ந்த இரத்தம் மகத்தான மருத்துவ மதிப்பு கொண்டது. அவற்றின் இரத்தத்தில் லிமுலஸ் அமெபோசைட் லைசேட் எனப்படும் புரதம் உள்ளது, இது எண்டோடாக்சின்களைக் கண்டறியப் பயன்படுகிறது.
மருத்துவ மற்றும் மருந்து தயாரிப்புகளை பரிசோதிப்பதற்கு நீல தங்கம் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இந்த குதிரைலாட நண்டுகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
ரத்தத்தை சேகரிப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 6,00,000 நண்டுகள் சேகரிக்கப்படுகின்றன. இதில் உயிர் பிழைக்கும் நண்டுகள் மீண்டும் கடலுக்குள் விடப்படுகின்றன. இந்த நண்டுகளை பிடிக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.