ஜோதிடத்தை நம்பி விஜய் மறுத்த மெகா ஹிட் திரைப்படம்.. முழு பின்னணி என்ன..??

சுந்தர் சி யின் இயக்கத்தில் 1996 இல் கார்த்திக் ரம்பா கவுண்டமணி செந்தில் மணிவண்ணன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் உள்ளத்தை அள்ளித்தா. இந்த திரைப்படத்திற்கு முதன்முதலாக சுந்தர் சி நடிகர் விஜயை அணுகினாராம். ஆனால் விஜய் நடிக்க மறுத்துவிட்டாராம்.
இதற்கான காரணம் என்னவென்று கேட்டபோது உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர் என்றும் ஆகையினால் 1996 ஜனவரி 15ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவேண்டும் என்று கூறினாராம்.
ஆனால் ஏற்கனவே நடிகர் விஜய் நடித்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை திரைப்படமும் அதே தேதியில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவிருந்த காரணத்தினால் உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தை வேறு தேதியில் மாற்றினால் விஜய் நடிக்க வைப்பதாக எஸ்.ஏ சந்திரசேகர் கூறியிருந்தாராம்.
அது முடியாது என்ற காரணத்தை சுந்தர் செய்யும் படத்தின் தயாரிப்பாளரும் சொன்னதன் விளைவாக உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் விஜயின் கைவிட்ட நழுவியது.
பிறகு தான் உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்திற்கு மேலே குறிப்பிட்ட நட்சத்திரங்கள் பங்களிப்புடன் படமாக்கப்பட்டு ரிலீஸ் ஆனதுடன் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்தது. இதுபோன்று பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை விஜய் மிஸ் பண்ணியது குறிப்பிடத்தக்கது.