கோடிகளை இழந்த ஆண்டவர்… கமல் ரசிகர்கள் கவலை…!

கர்நாடகாவில் மொழி பிரச்சனை, தமிழ்நாட்டில் தீ, சின்மயி பாடல் வெர்ஷன் பஞ்சாயத்து என பல ப்ரீ புரோமோஷன்களை கிளப்பி விட்டும், கமல் ஹாசன் மலைப்போல் நம்பியிருந்த அவருடைய தக் லைஃப் திரைப்படம் அவரது காலை வாரிவிட்டுள்ளது.
நாயகன் படத்திற்கு பிறகு மிக நீண்ட இடைவெளிக்குப் பின் மணிரத்னம், கமல் காம்போ கம்பேக் கொடுத்ததால் சினிமா ரசிகர்கள் தக் லைஃப் படத்தைக் காண தவம் கிடந்தனர் என்று தான் சொல்ல வேண்டும்.
சிம்பு, அபிராமி, த்ரிஷா என நட்சத்திர பட்டாளங்களுடன் நடித்திருந்த படம், ரசிகர்கள் எதிர்ப்பை துளியும் பூர்த்தி செய்யவில்லை எனக்கூறப்படுகிறது. ஜூன் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இப்படம் வெளியானது.
இந்தியாவில், படம் வெளியான நாளில் மொத்தம் 4917 காட்சிகளைக் கடந்திருக்கிறது. இந்தியில் 1,535 ஷோக்கள், தமிழில் 2,503 ஷோக்கள், தெலுங்கில் 777 காட்சிகள் மற்றும் ஐமேக்ஸ் 2டி மற்றும் 4டிஎக்ஸில் அனைத்து மொழிகளிலும் சுமார் 102 காட்சிகள் ஓடியுள்ளது.
ஆனால் கலெக்ஷன் என்னவோ எதிர்பார்த்ததைவிடவும் மிக மிக குறைவாகவே கிடைத்துள்ளது. கடந்த 6 நாட்களில் இந்தியாவில் மட்டும் தக் லைஃப் திரைப்படம் வெறும் 40 கோடியே 95 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது. தொடர்ந்து படத்தைப் பற்றி நெகட்டீவ் விமர்சனங்களே வெளியாகி வருவதால், கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய கடனில் சிக்கும் அபாயம் இருப்பதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஏனெனில் இந்த படத்திற்காக மட்டும் 200 முதல் 300 கோடி வரை செலவழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படியொரு மொக்க படத்துக்கா ஆண்டவரே இந்த பேச்சு பேசுனீங்க என கமல் ரசிகர்களே அலுத்துக்கொள்கிறார்களாம்.