முதன்முறையாக சவுதி கப்பலை தாக்கிய ஹவுத்திக்கள்!

முதன்முறையாக சவுதி அரேபியாவின் ஆயில் கப்பல் மீது தாக்குதல்…
இஸ்ரேலுக்கு சென்றதால் ஏமன் ஹவுத்திப்படை நடவடிக்கை…
அமெரிக்கா கடும் கண்டனம்…
சவுதி அரேபியாவுக்கு சொந்தமான அம்ஜத் மற்றும் பனாமா நாட்டு கொடியுடன் சென்ற புளு லகான் ஆகிய 2 ஆயில் கப்பல்கள் மீது செங்கடலில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அத்துமீறிய தீவிரவாதச் செயல் என அமெரிக்கா கண்டித்துள்ளது.
அதே நேரம் புளு லகான் கப்பல் தாக்கப்பட்டதை மட்டும் ஹவுத்திப்படை உறுதி செய்துள்ளது. சவுதி கப்பல் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.
2 பாலிஸ்டிக் மிசல்ஸ்கள், ஒரு ஆள் இல்லா விமானம் மூலம் இந்த 2 ஆயில் கப்பல்களும் தாக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 2 கப்பல்களும் சேதம் அடைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சவுதி அம்ஜத் சரக்கு கப்பலில் 2 மில்லியன் பேரல் ஆயில்கள் இருந்துள்ளன. இரண்டு கப்பல்களும், அருகருகே பயணித்த போது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் கப்பலின் இயக்கம் முழுமையாக முடக்காததால், அந்த கப்பல்கள் அங்கிருந்து சென்று விட்டதாகவும், உயிரிழப்புகள் இல்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
சவுதி ஆயில் கப்பலான அம்ஜத், பஹ்ரி என்ற சவுதி நிறுவனத்திற்கு சொந்தமானது. ஆனால் அந்த நிறுவனமும் இந்தத் தாக்குதல் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
ஏமன் படைகளுடன் நேருக்கு நேர் யுத்தத்தில் 10 ஆண்டுகளாக ஈடுபட்ட வந்த சவுதி, தற்போது அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் காசா விவகாரத்தில் ஏமன் படைகள் ஆக்ரோஷமாக செயல்பட்டு வருவதால், அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இருந்து சவுதி பின்வாங்கியுள்ளது.
ஏமன் படைகள் மீது தாக்குதல் நடத்துவது, நேரடியாக இஸ்ரேலை ஆதரிக்கும் செயல் என்பதோடு, ஈரான் உதவியுடன் கடும் பதிலடியை ஏமன் படைகளும் கொடுப்பார்கள் என்பதால், சவுதி அமைதி காத்து வருவதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களை ஏமன் ஹவுத்திப்படைகள் தாக்கும் நிலையில், சவுதி, அமீரகம், எகிப்து, ஜோர்டான், துருக்கி உள்ளிட்ட முஸ்லீம் நாடுகளில் இருந்து இஸ்ரேலுக்கு தொடர்ந்து, கப்பல்களும், சரக்குகளும் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.
=========