உலகம்

ஊதாரித்தனத்தின் உச்சம் – மனைவி தனிமையில் குளிக்க ரூ. 418 கோடிக்கு தீவு வாங்கிய அரபி!

துபாயைச் சேர்ந்த அரபு தொழிலதிபர் Jamal Al Nadak. இவரது 26 வயது மனைவி Soudi Al Nadak. தனது மனைவி நீச்சல் உடையில் கடலில் குளிக்க வேண்டும், அதனை தான் மட்டும் பார்க்க வேண்டும், வேறு யாரும் பார்க்க கூடாது என நினைத்த Jamal, 418 கோடி ரூபாய்க்கு, தனி தீவு ஒன்றை வாங்கியுள்ளதாக செய்திகள் வைரலாகி வருகின்றன.

அந்த தீவுக்கு தனி விமானத்தில் அவர்கள் புறப்படும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. இதுகுறித்து புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.எண்ணெய் வளம் கொழிக்கும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளில் மன்னர் ஆட்சி நடைபெறுவதால், அரச குடும்பத்தினர் கணக்கு வழக்கு இல்லாமல் செல்வங்களை குவித்துள்ளனர். உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிடும் போர்ப்ஸ் பத்திரிக்கை, சவுதி, துபைய் மன்னர் குடும்பங்கள் பற்றிய தரவுகளை வெளியிடுவதில்லை.

அப்படி வெளியிட்டால், உலகின் முதல் பணக்காரர் எனக் கூறப்படும் எலான் மஸ்க்கை விட, சவுதி, துபைய் ஆட்சியாளர்கள் தான் அந்த பட்டியலில் முதல் இடங்களில் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.நாட்டின் எண்ணெய் வளம் மொத்தத்தையும் அவர்களே ஆண்டு அனுபவிக்கின்றனர். அந்நாட்டின் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து விடுவதால், அவர்களும் கேள்வி கேட்பதில்லை. கேள்வி கேட்பவர்களை அவர்கள் சாதாரணமாக விட்டு விடுவதும் இல்லை.ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள பல முஸ்லீம் நாடுகளின் கோடிக்கணக்கான மக்கள், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு போன்ற வல்லரசு நாடுகளின் காலணி ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டு, உள்நாட்டுப் போர், பஞ்சம், வறட்சி ஆகியவற்றால், குடிக்க தண்ணீரும், ஒரு வேளை உணவும் கூட இல்லாமல் அல்லல் படுகின்றனர். இவர்களை பற்றியெல்லாம் இந்த அரபு ஆட்சியாளர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.

தனது வாகனத்தின் பின் இருக்கையில் ஒரு இடம் காலியாக இருந்தால், அது இன்னொருவருக்கு சொந்தமானது என போதனை வழங்கிய நபிகளாரின் சொந்த மண்ணில் இருந்து கொண்டு, ஊதாரி வாழ்க்கையால், நபிகளாரின் கொள்கைகளுக்கே குந்தகம் விளைவிக்கின்றனர்.பசியால் வயிற்றில் கல்லைக் கட்டிக் கொண்டு, வலம் வந்த நபிகளாரின் மண்ணில், இன்றைய அரபிகள் செய்யும் அழிச்சாட்டியங்கள் ஏட்டில் வடிக்க முடியாதவை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button