இந்தியா

ஹத்ராசில் கொத்து கொத்தாக மக்கள் உயிரிழப்பதை பார்த்த காவலர் – மாரடைப்பில் மரணம்!

நாட்டையே உலுக்கியுள்ள உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் சம்பவத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி நிகழ்வு அரங்கேறியுள்ளது.சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்களை ஒரே வாகனத்தில் ஏற்றி, மருத்துவமனைக்கு கொண்டு சென்ற காவலர், அந்த வாகனத்தில் மூட்டைகள் போல் கிடந்த உடல்களை பார்த்தும், பலர் தன் கண் முன்பு துடிதுடித்து உயிரிழப்பதை பார்த்தும், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
அந்தக் காவலரின் பெயர் ரவி யாதவ். இந்த நிகழ்வு காவல்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதில் கவனிக்கத்தக்க விசயம் இத்தனை கூட்டத்தில், இவ்வளவு நெரிசலில் பாபா மட்டும் பத்திரமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். அந்த அளவிற்கு அவருக்கு பாதுகாவலர்கள் இருந்தனர்.அவர் தனது வாகனத்தில் ஏறுவதற்கு முன்பு அவரது காலில் உள்ள மண்ணை, எடுக்க வேண்டும் என்பதற்காக முண்டியடித்து கீழே குணிந்த பக்தர்கள் மீது பின்னால் வந்தவர்கள் ஏறி மிதித்துச் சென்றுள்ளனர்.தனது காலடி மண்ணை எடுத்து, நோய் வாய் பட்டவர்களின் நெற்றியில் பூசினால், நோய் குணமாகும் என அவர் கூறி வந்துள்ளார்.

இதனால் அவர் எங்கு சென்றாலும், அவரது காலடி மண்ணை எடுக்க பக்தர்கள் போட்டி போட்டுள்ளனர். இங்கும் அந்தச் சம்பவம் நடந்துள்ளது.அவர் தன்னை கடவுள் ஹரியின் அவதாரம் என்றும் தனது மனைவியும் ஒரு பெண் அவதாரம் என பக்தர்களிடம் பிரச்சாரம் செய்து வந்துள்ளார்.மேலும் வெறும் தண்ணீரை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி வந்துள்ளார்.
பிற சாமியார்களை போல், பெரிய தாடி, தலைமுடி, குங்குமம், திருநீறு, காவி உடை இப்படியெல்லாம் இல்லாம், வெள்ளை நிற கோட், சூட், கூலிங் கிளாஸ் கண்ணாடி, என பந்தாவாக பவனி வந்துள்ளார். இவரது ஆசிரமம் மணிப்பூரி நகரம் அருகே சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button