1 வயது குழந்தையை, குரங்குகளிடம் இருந்து சாதுர்யமாக காப்பாற்றிய சிறுமி – பாராட்டி வேலை வழங்கிய ஆனந்த் மகேந்திரா!

1 வயது குழந்தையை சூழ்ந்த குரங்குகள்!
நாய் போல் ஒலி எழுப்பி காப்பாற்றிய சிறுமி!
பாராட்டி பணி வழங்க முன்வந்துள்ள ஆனந்த் மகேந்திரா!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அமேசான் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட அலெக்ஸா என்ற wifi ஒலிபெருக்கி கருவி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த ஒலிப்பெருக்கி அருகே சென்று நாம் ஏதாவது கூறினால், அதனை பதிவு செய்து கொண்டு, அதனை ஒலிப்பெருக்கியில் வெளியிடும் வசதியும் உள்ளது. இதனால் தற்போது பலரின் வீட்டிலும் இந்த அலெக்ஸா கருவி இடம்பிடித்துள்ளது.
தற்போது இந்த அலெக்ஸா கருவி மூலம் சமயோஜிதமாக செயல்பட்டு ஒரு சிறுமி, 1 வயது குழந்தைதயின் உயிரை காப்பாற்றியுள்ளார். இதன் மூலம் அவருக்கு புகழ்பெற்ற நிறுவனத்தில் வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகிதா என்ற 13 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரியின் வீட்டுக்கு சென்றபோது, அந்த வீட்டில் இருந்த அனைவரும் ஒரு அறையில் இருந்துள்ளனர்.
அந்த சிறுமி மாடியில் இருந்த மற்றொரு அறையில் தனது சகோதரியின் 1 வயது குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென அந்த அறைக்குள் குரங்குகள் நுழைந்துள்ளன. இதனால் அந்த சிறுமி பயத்தில் அலறியுள்ளார்.
ஆனால், அவரின் அந்த சத்தம் யாருக்கும் கேட்காமல் இருந்துள்ளது. அறைக்குள் நுழைந்த குரங்குகள் அங்கிருந்த பொருள்களை தூக்கி வீசியுள்ளன.
அந்த தருணத்திலும் புத்திசாலித்தனமாக யோசித்த அந்த சிறுமி, அந்த அறையில் இருந்த அலெக்ஸா கருவியிடம் நாய் போல குறைக்குமாறு கட்டளையிட்டுள்ளார். அலெக்ஸா கருவியும் நாய் குறைப்பதைப் போன்ற சத்தத்தை எழுப்பியுள்ளது.
அதனைக் கேட்ட குரங்குகள் அந்த அறையில் நாய் இருப்பதாக கருதி, அதற்கு பயந்து அங்கிருந்து அந்த அறையில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளன. அதன் பின்னர் கீழே சென்ற சிறுமி நடந்ததை தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார்.
இந்த தகவல் காட்டுத்தீப்போல பரவி ஊடகங்களிலும் வெளியானது. இந்த சிறுமிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர்.
இது குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திரா, சிறுமியின் விரைவான சிந்தனை அசாதாரணமனது மேலும், கணிக்க முடியாத உலகத்தில் தனது தலைமைத்துவ பண்மை நிருபித்துள்ள நிகிதா, படிப்பை முடித்த பிறகு, கார்ப்பரேட் உலகில் வேலை செய்ய முடிவு செய்தால், மகிந்திரா நிறுவனம் அவருக்கு வேலை கொடுக்க தயாராக உள்ளது என பதிவிட்டுள்ளார்.