உலகம்

பாலஸ்தீன் விடுதலை என முழக்கமிட்ட மாணவரை நாடு கடத்திய அரபு அமீரகம்!

பல்கலைக்கழக விழாவின் போது, பாலஸ்தீன் விடுதலை என முழங்கிய அமெரிக்க மாணவர்…
நாடு கடத்தி நடவடிக்கை எடுத்த, இஸ்ரேல் ஆதரவு ஐக்கிய அரபு அமீரகம்…

அபுதாபியில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கேம்பஸில், பட்டமளிப்பு விழாவின் போது, ‘Free Palestine’ என முழக்கமிட்ட அமெரிக்க மாணவர் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த மே மாதம் நடைபெற்றாலும், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பட்டமளிப்பு விழாவுக்கு வருபவர்கள், கலாச்சார உடைகளை அணியக் கூடாது என முன்கூட்டியே மாணவர்களுக்கு இ மெயில் அனுப்பட்டுள்ளது. அதையும் மீறி, பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக கெஃபியா துண்டு அணிந்து வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒரு அமெரிக்க மாணவர், பட்டமளிப்பு விழா மேடையில் ‘Free Palestine’ என முழக்கமிட்டுள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த அபுதாபி போலீஸ், அவரை அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. இதே போல் ஒரு ஆசிரியரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இதற்கு அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாணவரை பாதுகாக்க பல்கலைக்கழக நிர்வாகம் தவறியதாக குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்க பல்கலைக்கழகங்களிலேயே பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில், அரபு முஸ்லீம் நாடான அமீரகம், அமெரிக்க மாணவரை திருப்பி அனுப்பியுள்ளதன் மூலம் தனது உறுதியான இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டில் நீடிப்பதாக பார்க்கப்படுகிறது.

பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலை ஆட்டுவதைப் போன்று, கொல்லப்படும் காசா மக்களுக்கு பண உதவி செய்வதாக ஒரு பக்கம் விளம்பரம் செய்து கொள்ளும் அமீரகம், மறுபக்கம் இஸ்ரேல், அமெரிக்கா உடனான தனது உறவை தற்போதும் பேணி பாதுகாத்து வருவதாக கருதப்படுகிறது.

மன்னர் ஆட்சி நடைபெறுவதால், பெட்ரோல் எண்ணெய் கிணறுகள் மூலம் கிடைக்கும் வருவாய் உள்ளிட்ட எந்த ஒரு வருமானத்தையும் யாருக்கும் கணக்கு காட்ட தேவையற்ற அரசாக அமீரக அரசு உள்ளது. ஜனநாயக நாடாக இருந்தால், நாடாளுமன்றம், மக்கள் மன்றம் முன்பு கணக்கு காட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னர் ஆட்சியை பாதுகாக்கவே, அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு சில அரபு நாடுகள் காவடி தூக்குவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
===

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button