ஆட்டக்காரர்களுக்கு மட்டும் ரூ. 100 கோடி! அள்ளிக் கொடுக்கும் அம்பானி குடும்பம்!

ஜஸ்டின் பைபருக்கு மட்டும் 83 கோடி ரூபாய் சம்பளம்….
வரிசையாக களமிறங்கும் வெளிநாட்டு இசைக்கலைஞர்கள்…
ஆட்டக்காரர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் அம்பானி குடும்பம்…
ஒரு வழியாக வரும் ஜுலை 12ஆம் தேதி, ஆனந்த் அம்பானி திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்துக்கு முந்தைய இரண்டு பிரமாண்ட நிகழ்ச்சிகளுக்கு இதுவரை 2000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு விட்ட நிலையில்,தற்போது, அடுத்த கட்ட செலவினங்களுக்கு தயாராகி வருகிறது அம்பானி குடும்பம்.
இதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் இருந்து இறக்கப்படும் முக்கிய இசைக்கலைஞர்கள் அவர்களுடைய சம்பளம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் மிக முக்கியமானவர் ஜஸ்டின் பைபர். பாடகர், நடிகர் என பல அடையாளங்களை கொண்ட கனட இசைக்கலைஞரான இவர், ஆனந்த் அம்பானி திருமணத்தில் பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவரது ஒரு நிகழ்ச்சிக்கான சம்பளம் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில், 83 கோடி ரூபாய்.
அடுத்ததாக பிரிட்டன் பாடகி (Adele) அடெல். இவர் ஒரு நிகழ்ச்சிக்கு வாங்கும் சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் 16 கோடி ரூபாய். எனவே இந்த இரண்டு இசைக்கலைஞர்களுக்கு மட்டும் சுமார் 100 கோடி ரூபாயை அம்பானி குடும்பம் செலவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்ததாக கனடா ராப் பாடகர் Drake. இவர் ஒரு நிகழ்ச்சிக்கு வாங்கும் சம்பளம் சுமார் 8 கோடியே 50 லட்சம்.
மேலும் மற்றொரு இசைக் கலை அமெரிக்க பாடகி lana del rey. ஒரு நிகழ்ச்சிக்கு சுமார் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வாங்குகிறார்.
இவ்வாறாக அம்பானி குடும்ப இசை நிகழ்ச்சி மட்டும் 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்ய உள்ளனர். தொடர்ந்து பானி பூரி உள்ளிட்ட சாட் வகைகள் வாரணாசியில் உள்ள பிரபலம் வாய்ந்த, Kashi Chat Bhandar கடையில் இருந்து வர உள்ளன.
முன்னதாக வாரணாசி கோவிலுக்கு வழிபாட்டுக் சென்ற நீட்டா அம்பானி, அங்குள்ள Kashi Chat Bhandar கடைக்கு சென்று, தீனிகளை ருசி பார்த்தார். இதனையடுத்து, கையோடு, கல்யாணத்துக்கும் சேர்த்து ஒப்பந்தம் போட்டுவிட்டு வந்துள்ளார்.
======