உலகம்

வைரமுத்து வரிகளை உண்மையாக்கிய நடிகை…!

ஜீன்ஸ் படத்தில் காதலியை காதலன் உருகி உருகி வர்ணிப்பதாக வைரமுத்து எழுதிய பாடலில் தேவதை குளித்த துளிகளை அள்ளி தீர்த்தம் என்றே நான் குடிப்பேன் என பதிவிட்டிருப்பார். ஆனா நிஜத்திலோ நடிகை ஒருவர் தான் குளித்த நீரைக் கொண்டு சோப்பு தயாரித்து கல்லா கட்ட ஆரம்பித்துவிட்டார்.

ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி தனக்கென் ஒரு சோப் பிராண்ட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அமெரிக்காவில் பிரபலமான டாக்டர் ஸ்குவாட்ச் சோப் நிறுவனத்துடன் இணைந்து அவர் “Sydney’s Bathwater Bliss” எனும் சோப்பை வெளியிட்டுள்ளார்.

Sydney Sweeney Launches Soap Made from Her Bathwater │ Exclaim!

இந்த சிறப்பு என்னவென்றால், சிட்னி தான் குளித்த நீரின் சில துளிகளையும் சேர்த்து சோப் தயாரித்திருக்கிறார். பைன் மரத்தின் வாசனை மற்றும் பிசின் உள்ளிட்ட இயற்கை பொருட்களுடன் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த சோப்பு லிமிடெட் எடிஷனாக மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் போட்டி, போட்டு வாங்கி வருகிறார்களாம்.

வெறும் 5000 சோப்களில் மட்டுமே சிட்னி குளித்த தண்ணீர் கலக்கப்பட்டுள்ளதாம். அதன் விலை அமெரிக்க மதிப்பில் 8 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 700 ரூபாயாம். ஜூன் 6ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும், ஜூன் 4க்குள் முன்பதிவு செய்பவர்களில் முதல் 100 பேருக்கு இவை இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button