டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களின் விலை ரூ. 2 லட்சம் குறைந்தது! எலான் மஸ்க் அறிவிப்பு!

டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களின் விலை ரூ. 2 லட்சம் வரை குறைப்பு…
விற்பனையை அதிகரிக்க எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு…
டெஸ்லா கார்களின் விலையை குறைப்பதாக அந்நிறுவனத்தின் இயக்குனர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
கடந்த காலாண்டில் டெஸ்லா வின் விற்பனை கடும் சரிவை சந்தித்தது. ஆகையால் அமெரிக்கா மற்றும் சீன சந்தைகளில் டெஸ்லாவின் X,Y மற்றும் S வகை மாடல்களின் விலை 1.5 லட்சம் ரூபாய் வரை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 முதல் இந்த விலை மாற்றம் நடைமுறைக்கு வருவதாக டெஸ்லா தெரிவித்துள்ளது.
இதன்படி புதுப்பிக்கப்பட்ட X வகை மாடல்களின் ஆரம்ப விலை சுமார் 65 லட்சம் ரூபாயாகவும், மாடல் Y – base rear wheel drive வகையின் ஆரம்ப விலை இந்திய ரூபாய் மதிப்பில் 37 லட்சத்தில் இருந்து 35 லட்சம் ரூபாயாகவும், Y- Long Range மாடல்களின் ஆரம்ப விலை 42 லட்சத்தில் இருந்து 40 லட்சம் ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் S-dual motor வகை மாடல்களின் ஆரம்ப விலை 62 லட்சத்தில் இருந்து 60 லட்சமாகவும், S-tri motor வகை மாடல்களின் ஆரம்ப விலை 75 லட்சத்தில் இருந்து 73 லட்சமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை மாற்றம் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
===========