
மு.க.ஸ்டாலின் பற்றி பேசிய வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன்…
தேர்தலுக்குள் எத்தனை பேரை சிறையில் தள்ளுவீர்கள் என உச்ச நீதிமன்றம் கேள்வி…
மு.க.ஸ்டாலின் பற்றி, இனி சாட்டை துரைமுருகன் பேசக்கூடாது என உத்தரவிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் பதில்..
கடந்த 2021-ம் ஆண்டு தனது யூடியூப் பக்கத்தில் நாம் தமிழ்ர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து தனிப்பட்ட முறையில் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இது குறித்து தொடரப்பட்ட வழக்கில், சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது.
பின்னர் அதே ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை
துரைமுருகன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து மீண்டும் தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து இது குறித்து காவல்நிலையத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த அவதூறு வழக்கில் துரைமுருகனை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமின் கோரி சாட்டை துரைமுருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், சாட்டை துரைமுருகன் தஞ்சாவூரில் நடைபெற்ற கூட்டத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாக காவல்துறை சார்பில் கூறப்பட்டது. எனவே துரைமுருகனின் முந்தைய ஜாமீன் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இதனை எதிர்த்து சாட்டை துரைமுருகன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எழுப்பிய கேள்வி இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. யூடியூபில் அவதூறு கருத்துக்களை பேசுபவர்களை சிறையில் அடைக்க வேண்டும் எனில், எத்தனை பேரை தேர்தலுக்கு முன்னர் அடைக்க வேண்டியதாக இருக்கும் தெரியுமா? என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும்சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டனர்.
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களுக்கு எதிராக கருத்து கூறுபவர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைப்பது தொடர்ந்து வருகிறது.
இந்த வழக்கில் ஏராளமான சமூக ஆர்வலர்கள் சிறையில் உள்ளனர். இத்தகைய சூழலில் உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்தின் அடிப்படையில், அவதூறு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏராளமானோர் ஜாமினில் வெளிவர வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதோடு சாட்டை துரைமுருகன் வழக்கில்,.இனி, அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசக்கூடாது என உத்தரவிடும் படியும் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், உச்சநீதிமன்றம் அதை ஏற்கவில்லை. என்பதும், இதன் மூலம் கருத்துரிமையை உச்சநீதிமன்றம் மீண்டும் நிலைநாட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
====================