தனது லக்கி சாம் உடன் விண்வெளியில் இருந்து திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்…!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய இந்திய-அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் நேற்று பூமிக்குத் திரும்ப உள்ளார். ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புளோரிடா கடலில் வந்திறங்கிய சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை டால்பின்கள் வரவேற்றன. இந்திய உணவுகளின் காதலியான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு சமோசாக்களை எடுத்துச் சென்றது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி சுனிதா வில்லியம்ஸைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் சோசியல் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது சுனிதா பகவத் கீதையுடன் தன்னுடைய லக்கி சாமான விநாயகர் சிலையையும் உடன் எடுத்துச் சென்ற செய்தி காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவில் வசித்து வந்தாலும், இந்திய கலாச்சாரத்தின் வேர்களை மறக்காதவர் என அவ்வப்போது புகழப்படுகிறது. அதனை நிரூபிக்கும் வகையில் அவர் தனது விண்வெளி பயணத்தின் போது பகவத் கீதையை உடன் எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது 3வது முறையாக நாசாவின் போயிங் ஸ்டார்லைனர் காப்ஸ்யூல் விண்வெளி பயணம் மேற்கொண்ட சுனிதா, தனது குட்லக் சாம் ஆன விநாயகர் சிலையையும் கையோடு எடுத்துச் சென்றுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் விநாயகர் சிலை மிதந்து கொண்டிருக்கும் போட்டோவையும் சுனிதா, தனது உறவினர் ஒருவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதேபோல் மகா கும்பமேளா தொடர்பான சில புகைப்படங்களை அவரது உறவினர் சுனிதா வில்லியம்ஸுக்கு அனுப்பி வைத்துள்ளார். உடனே சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட மகாகும்பமேளா புகைப்படங்களை அவருக்கு ஷேர் செய்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதேபோல் சுனிதா வில்லியம்ஸ் விரைவில் இந்தியா செல்ல வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவரது உறவினர் தெரிவித்துள்ளார்.