உலகம்

விண்வெளியில் எப்படியிருக்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2025 பிப்ரவரி வரையிலு அங்கேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கியிருப்பதால் சுனிதா வில்லியம்ஸின் உடல் எடை குறைந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின. இந்நிலையில் தனது உடல் நிலை குறித்த ஊடகங்களின் யுகங்களுக்கு சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தே வீடியோ மூலமாக பதிலளித்துள்ளார்.

தான் விண்வெளிக்கு வந்த போது இருந்த அதே எடையில் தான் தொடர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளார். தனது தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு திரவ மாற்றமே காரணம் எனத் தெரிவித்துள்ள அவர், தனது உடல் நிலை குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும் விளக்கியுள்ளார்.

மேலும் தசை மற்றும் எலும்பு அடர்த்தியை பாதுகாப்பதற்காக மைக்ரோ கிராவிட்டி விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்காக விண்வெளி வீரர்கள் கடைபிடிக்கும் கடுமையான உடற்பயிற்சி முறையால் அவரது உடல் தோற்றம் மாறிவிட்டது எனத் தெரிவித்துள்ளார். எலும்பு அடர்த்திக் குறைபாடு ஏற்படுவதைத் தவிர்க்க சைக்கிளிங், டிரெட்மில்லில் ஓடுவது மற்றும் பளு தூக்குதல் ஆகிய 3 உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து மேற்கொள்வதால் தனது தொடை மற்றும் பிட்டம் பெரிதானதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல் அன்றாட பணிகளைப் பொறுத்தவரை விண்வெளி வீரர்கள் எப்படி குளிப்பார்கள், துணி துவைப்பார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படலாம் . விண்வெளி வீரர்கள் தினந்தோறும் ஸ்பாஞ்ச் பாத் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் பூமியில் துணி துவைப்பது போல் விண்வெளியில் துணி துவைக்க முடியாது. ஏனெனில் அங்கு புவியிர்ப்பு விசை கிடையாது. இதனால் ஆடைகளும் மிதந்துகொண்டுதான் இருக்கும். ஆகையால், ஆடைகள் விரைவில் அழுக்காவதோ, சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படுவதோ நடக்காது. இதனால், அவர்கள் அந்த உடைகளை நீண்டகாலத்திற்குப் பயன்படுத்த முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button