பாகிஸ்தானால் பஸ்ம பாகப்போகும் பப்ஜி காதல்… இந்திய மருமகளின் பரிதாப நிலை!

மோடி ஜி நான் இந்தியாவை விட்டு போகமாட்டேன்…
அடம்பிடிக்கும் பாகிஸ்தானின் மகள் சீமா ஹைதர்… யார் இவர்?
ஜம்மு -காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் முழு நாட்டையும் உலுக்கியுள்ளது. மத்திய அரசு பாகிஸ்தான் குடிமக்களின் விசாக்களை ரத்து செய்து, 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. ஆனால் காதலுக்காக பாகிஸ்தானை விட்டு இந்தியாவுக்கு வந்த அந்தப் பெண் சீமா ஹைதருக்கு என்ன நடக்கும்..?
பப்ஜி கேம் மூலம் மலர்ந்த காதலுக்காக பாகிஸ்தானில் இருந்து தனது கணவனை உதறித்தள்ளிவிட்டு, 4 குழந்தைகளுடன் சீமா ஹைதர் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்கு வந்தார்.
2019ம் ஆண்டு சீமாவுக்கும், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சச்சின் மீனாவுக்கும் இடையே ஆன்லைன் கேம் மூலம் மலர்ந்த காதலை அடுத்து 2023ம் ஆண்டு சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த சீமா, சச்சினை திருமணம் செய்துகொண்டார். இதுதொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
சீமா ஹைதர் இந்தியாவில் தொடர்ந்து வசிப்பதற்காக குடியரசுத் தலைவரிடம் வழங்கியுள்ள கருணை மனு இன்று வரை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கண்ணீர் மல்க சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சீமா ஹைதர்… “நான் பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பவில்லை. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்)ஆகியோரிடம் நான் இந்தியாவில் தங்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என மன்றாடியுள்ளார்.
சச்சின் மீனாவை மணந்து ஒரு குழந்தையை பெற்றுள்ளதால் சீமா முழு இந்திய குடிமகளாக மாறிவிட்டதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்துவான சச்சின் மீனாவை மணந்தது முதல் சீமா முழு இந்துவாக மாறிவிட்டதாக கூறி வருகிறார். சமீபத்தில் மகா கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு 51 லிட்டர் பசும் பால் வழங்கியது, சந்திரயான் 3 வெற்றி பெறுவதற்காக விரதம் இருந்தது என சோசியல் மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்ட சீமா ஹைதர், தொடர்ந்து இந்தியாவிலேயே வசிப்பாரா? இல்லை பாகிஸ்தானுக்கு விரட்டியடிக்கப்படுவாரா? என பொறுத்திருந்து பார்ப்போம்…