உலகம்

மகனின் பெயரை அறிவித்த சனா கான்!

நடிகையாக இருந்து ஆன்மீக வாழ்கைக்கு திரும்பிய சனா கான்…மகனின் பெயரை அறிவித்து மகிழ்ச்சி…
மும்பையைச் சேர்ந்த நடிகை சனா கான், தமிழில் சிலம்பாட்டம், ஈ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு, திரைத்துறையை விட்டு விலகி ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இவரது சனாவை விட அவரது கணவர் அனஷ் 7 வயது சிறியவர். தனது காதலை சனாவிடம் அவர் தெரிவித்த நிலையில், இருவரும் பழகி, மனம் ஒத்துப் போன நிலையில், திருமணம் செய்தனர்.

அனஷ் ஒரு இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஆவார். அதே நேரம் இவரது குடும்பத்தினர் சூரத்தின் பாரம்பரிய வைர வியாபாரிகள் ஆவார்கள். எனவே பிரமாண்ட பங்களாக்கள், சொகுசு கார்கள் என பல கோடி ரூபாய்க்கு அனஷ் அதிபதி ஆவார்.இந்நிலையில், இந்த தம்பதிக்கு 2வதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு, சையது ஹசன் ஜமீல் என பெயர் சூட்டியுள்ளனர். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். குழந்தைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button