சினிமா

சமந்தா கட்டியிருக்கும் இந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?

தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக வலம் வந்த சமந்தா, ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் மூலமாக இந்தியில் கால் பதித்தார். தற்போது அவருடைய 2வது பாலிவுட் வெப் தொடரான “சிட்டாடல் ஹனி பன்னி” வெப்சீரிஸ் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இதற்கான சிறப்பு திரையிடலில் பங்கேற்ற சமந்தா ஸ்பெஷலான தங்க நிற உடையில் தேவதையாய் மிளிர்ந்தார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. அந்த போட்டோக்களில் நெட்டிசன்கள் ஒரே ஒரு விஷயத்தைத் தான் மீண்டும், மீண்டும் ஜூம் செய்து பார்த்து வருகிறார்கள் . அது சமந்தா தனது கையில் அணிந்துள்ள செம்ம டிரெண்டியான கோல்ட் பேங்கல் மாடல் வாட்சை தான். அவருடைய கோல்டன் டிரஸுக்கு மெருகேற்றக்கூடியதாக அமைந்த இந்த வாட்சின் விலையை கூகுளில் சர்ச் செய்து பார்த்த நெட்டிசன்கள் செம்ம ஷாக்கில் உள்ளனர்.

காரணம் இந்த வாட்ச் வாங்க நீங்கள் செலவழிக்கக்கூடிய விலையில், ஒரு சொகுசான எஸ்யூவி காரையே வாங்கிவிடலாம். சமந்தா அணிந்துள்ள இந்த ஸ்பெஷலான வாட்ச் பல்கேரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. பல்கேரி தங்க பிரேஸ்லெட் மாடல் டைம்பீஸான இது “செர்பென்டி டூபோகாஸ்” என அழைக்கப்படுகிறது. 18 கேரட் கோல்ட் கேஸ், அதனைச் சுற்றியிலும் அழகான வைரங்கள் மற்றும் ஒரு வெள்ளி ஓபலைன் டயல் ஆகியவை உள்ளன. இதன் விலை 45 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனால் தான் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோ சோசியல் மீடியாவில் வழக்கத்தை விட வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button