சல்மான் அணிந்த ரூ. 42 கோடி கைக் கடிகாரம்! அப்படி அதில் என்ன உள்ளது?

விலை உயர்ந்த கடிகாரங்களை தயாரிக்கும் நிறுவனம் ஜாக்கப் அன்ட் கோ. இதன் நிறுவனர் ஜாக்கப் அரபோ. இவர் தனது இண்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில், நடிகர் சல்மான் கான் விலை உயர்ந்த ஒரு கடிகாரத்தை அணிந்து போஸ் கொடுக்கிறார்.
இந்த கடிகாரத்தை வழக்கமாக யாரையும் அணிய அனுமதிக்க மாட்டோம். சல்மான் கான் என்பதால் அவரை அனுமதிக்கிறோம் என ஜாக்கப் அரபோ பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து கொதித்த சல்மான் கானின் ரசிகர்கள், அந்த கடிகாரம் எவ்வளவு விலை உடையதாக இருந்தாலும், சல்மான் அணிந்ததால் தான் பெருமை அடைகிறது என பதிவிட்டு வருகின்றனர். சரி அந்த கடிகாரத்தின் விலை என்ன? அதில் என்ன உள்ளது?
சல்மான்கானுக்கு மட்டும் சிறப்பு சலுகை கொடுக்கும் அளவுக்கு அந்த கடிகாரம் உயர்ந்ததா என்பதை பார்க்கலாம்.
அந்தக் கைக் கடிகாரத்தின் பெயர் பில்லினியர் 3. அந்த வாட்சின் case மற்றும் inner ring ஆகியவை 152 emerald-cut diamonds களை கொண்டவை. ஒவ்வொரு இடத்திலும் 76 diamond கள் பதிக்கப்பட்டுள்ளன.அந்த கடிகாரத்தின் movement bridges கள் 57 baguette-cut diamonds களை கொண்டவை. மேலும் bracelet, 504 white emerald-cut diamonds கள் மூலம் அமைக்கப்பட்டவை. மொத்தமாக அந்த கடிகாரத்தில் 714 வெள்ளை டைமன்ட்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கடிகாரத்தின் விலை 41.98 கோடி ரூபாய் ஆகும். இவ்வளவு விலை கொடுத்து சாதாரணமானவர்கள் யாரும் இதனை வாங்க முடியாது என்பதால், அந்த நிறுவனம் இந்த கடிகாரத்தை குறிப்பிடும் போது, இது ராஜாக்களுக்கு ஏற்றது என விளம்பரம் செய்துள்ளது. பில்லினியர் என்ற பெயரில் இதற்கு முன்பு விலை உயர்ந்த வாட்ச்சுகளை அறிமுகம் செய்த அந்த நிறுவனம் தற்போது, அதன் அடுத்த வெர்சனமாக பில்லினியர் 3 கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
சல்மான் கான் இந்தக் கடிகாரத்தை, கட்டி பார்த்துவிட்டு கொடுத்து விட்டார் எனக் கூறப்படுகிறது. அதே நேரம் சல்மான் கானின் சொத்து மதிப்பு 3000 ஆயிரம் கோடி ஆகும். அவர் நினைத்தால் இதுபோன்ற 100 கடிகாரங்களை வாங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.