ரஷ்ய உயர்மட்டத் தலைவர் ஈரானுக்கு விசிட்!

ஈரானுக்கு விசிட் அடித்துள்ள ரஷ்ய ராணுவ தலைவர்…
அமெரிக்க தளபதி இஸ்ரேல் சென்ற நிலையில் திருப்பம்…
பதற்றத்தின் உச்சத்தில் இஸ்ரேல்…
ரஷ்யாவின் முன்னாள் ராணுவ அமைச்சரும், தற்போதைய தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளருமான Sergei Shoigu திங்கட்கிழமை ஈரான் விஜயம் செய்துள்ளார். தெஹ்ரானில் ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அட்மிரல் அலி அக்பர் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் ஆகியோரை சந்தித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் சில மணி நேரங்களில் தாக்குதல் நடத்த உள்ள நிலையில், ரஷ்ய உயர் அதிகாரியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், சமிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கு பகுதியின் அமெரிக்க ராணுவ தளபதியான குரில்லா, இஸ்ரேல் சென்றுள்ள நிலையில், ரஷ்ய அதிகாரி ஈரான் சென்றுள்ளார்.
ஈரான் – ரஷ்யா இடையே நெருங்கிய ராணுவ உறவு நிலவி வருகிறது. ரஷ்யாவுக்கு தரையில் இருந்து தரை இலக்குகளை தாக்கும் பாலிஸ்டிக் மிசல்ஸ்கள், தற்கொலைப்படை டிரோன்கள் ஆகியவற்றை பெருமளவில் ஈரான் வழங்கியுள்ளது.
இதே போல் அமெரிக்காவிற்கு அடுத்ததாக சர்வதேச அளவில் வல்லரசு நாடாக கருதப்படும் ரஷ்யா, உலக அரங்கில் ஈரானுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கி வருகிறது.
முன்னதாக ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ரஷ்யா, இது மிகத் தீவிர ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்தது. மேலும் ஹமாஸ் அமைப்பை போராளிக்குழுவாக மட்டுமே கருத முடியும், தீவிரவாத இயக்கமாக கருத முடியாது என்ற கொள்கைளை ரஷ்யா கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
========