ரூ. 75 லட்சம் பணம்! குற்றவாளிக்கு கொடுத்த நெல்சனின் மனைவி? திடுக்கிடும் தகவல்கள்!

பகுஜன் சமாஜ் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வழக்கு சூடு பிடித்து வருகிறது. புதிய திருப்பமாக போலீசாரால் தேடப்படும், மொட்டை கிருஷ்ணன் என்பவருக்கு பிரபல இயக்குநர் நெல்சனின் மனைவி, மோனிஷா 75 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இருவரும் நட்சத்திர விடுதியில் சந்தித்து பேசியதாகவும், தொலைப்பேசியில் பலமுறை பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து நெல்சனின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி நிலையில், தானும், கிருஷ்ணனும் சக வழக்கறிஞர்கள் என்பதால், தொழில் ரீதியாக சந்தித்து பேசியதாக மோனிஷா குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.மொட்டை கிருஷ்ணன், வெளிநாடுகளில் தனது இருப்பிடத்தை தொடர்ந்து மாற்றி வருவதால், சர்வதேச போலீசின் உதவியை தமிழக போலீசார் நாடியுள்ளதாக கூறப்படுகிறது.இந்த வழக்கில் இயக்குநர் நெல்சனையும் காவல்துறையினர் விசாரிப்பார்கள் என கூறப்படுகிறது.