வைரல்

“10 நாளில் ரூ. 10 கோடி!” திரைப்பட ஒப்பந்தத்தில் கைழுத்திட்ட மோனாலிஷா!

மத்திய பிரதேச மாநிலம் மகேஸ்வரை சேர்ந்த ஏழைச் சிறுமி மோனாலிஷா. அங்குள்ள நர்மதா நதிக்கரையில் பூ விற்று வந்துள்ளார்.உ.பி. மாநிலத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில், ருத்ராட்ச மாலை விற்பதற்காக தனது குடும்பத்தினருடன் சென்றார்.

அங்கு வந்த ஒரு யூ டியூபர், சிறுமியின் கண் அழகால் ஈர்க்கப்பட்டு, அதுகுறித்த கன்டென்ட் ஒன்றை வெளியிட, ஓவர் நைட்டில் ஒபாமா ஆனார் சிறுமி மோனாலிஷா.காந்த கண் அழகியாக புது அவதாரம் எடுத்த அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள, இளைஞர்கள் வன்முறையை கூட கையில் எடுக்க தயங்கவில்லை.
இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டதோடு, பாதுகாப்பும் இல்லாத காரணத்தால், சொந்த ஊருக்கு திரும்பினார். அதே நேரம் அவரை பல தொலைக்காட்சிகள், யூ டியூப் சேனல்கள் பேட்டி எடுக்க குவிந்தனர்.

இதனிடையே அவர் 10 நாளில் 10 கோடி ரூபாய் சம்பாதித்ததாக ஒரு தகவல் பரவியது.இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, உண்மையில் 10 நாட்களாக வியாபாரம் இல்லாமல் செலவுக்கே பணம் இல்லாமல் திண்டாடி, 35 ஆயிரம் ரூபாய் தனது குடும்பத்தினர் கடன் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.அதே நேரம் பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா என்பவர் தான், புதிதாக இயக்கும் ‘The Diary of Manipur.’

திரைப்படத்திற்காக மோனாலிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளார். மகேஷ்வருக்கு நேரடியாக சென்ற அவர், மோனாலிஷா குடும்பத்தினரை சந்தித்து பேசி, திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார்.எனினும், சிறுமிக்கு என்ன கேரக்டர் கொடுக்கப்படும், எவ்வளவு சம்பளம் போன்ற தகவல்களை அவர் வெளியிடவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button