சினிமா

நடிகர் விஜயை விட 4 மடங்கு சொத்து – நடிக்காமலேயே சம்பாதித்த ரம்பா!

ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்து விட்டாலே போதும், பல கோடி மக்களிடம் பிரபலம் அடைந்து விடலாம். ஆனால் பொருளாதாரத்தில் நிலைத்து நிற்பது என்பது சிலரால் மட்டுமே முடியும். எத்தனையோ பிரபல நடிகர்கள், இயக்குநர்கள், இன்னும் வாடகை வீட்டில் இருப்பதை காண முடியும்.அந்த வகையில் தனது திரைப் பிரபலத்தை மிகச் சரியாக பயன்படுத்தியவர்கள் சிலர் மட்டுமே. அதில் ஒருவர் தான் ரம்பா. இளைய தளபதி என ரசிகர்களால் கொண்டாப்படும் நடிகர் விஜயின் சொத்து மதிப்பு சுமார் 600 கோடி ரூபாய். ரஜினியின் சொத்து மதிப்பு சுமார் 430 கோடி ரூபாய். அஜித்தின் சொத்து மதிப்பு 350 கோடி ரூபாய். இவையெல்லாம் அரசிடம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் காட்டிய கணக்குகள். உண்மையான மதிப்பு இறைவனுக்கே தெரியும்.அதே நேரம் இவர்கள் எல்லோரையும் விட ஒரு நடிகை அதிக சொத்து வைத்திருக்கிறார் என்றார் அது ரம்பா தான். இவரது கணவர் இந்திர குமார் பத்மநாபன் ஒரு இலங்கை தமிழர். கனடாவில் செட்டில் ஆனவர்.

இவரது Magic Woods இண்ட்டீரியர் நிறுவனம் உலக அளவில் பிரபலம் வாய்ந்தது.இந்த நிறுவனம் மட்டுமின்றி ரம்பாவின் பெயரிலும் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். மொத்தம் 4 பெரிய நிறுவனங்களை இந்த குடும்பம் நடத்தி வருகிறது. இவர்களது மொத்த சொத்து மதிப்பு 2000 கோடி ரூபாய் என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.ரம்பாவுக்காக அவரது கணவர் தன்னிடம் வாய்ப்பு கேட்டதாகவும், விரைவில் ரம்பாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதற்கு முன்னதாக பெரும் தொழில் அதிபரை திருமணம் செய்த நடிகை என்றால் அவர் அசின். ராகுல் சர்மா என்ற மைக்ரோமேக்ஸ் மொபைல் நிறுவன உரிமையாளரை திருமணம் செய்தார். அவரது சொத்து மதிப்பு 1300 கோடி ரூபாய்.நடிகர்கள் விழுந்து, புரண்டு, சண்டையிட்டு, வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி சம்பாதிக்கும் நிலையில், சில நடிகைகளோ, திருமணம் மூலம் பணக்காரர் ஆகி விடுவது பேசு பொருள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button