ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு – திரைப்படமாக உருவாகிறது!

ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது!ரஜினியிடம் உரிமை பெற்ற பிரபல இந்தி தயாரிப்பாளர் சாஜித்.
ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரிக்க பிரபல இந்தி தயாரிப்பாளர் சாஜித் நாதியத்வாலா உரிமம் பெற்ற செய்தி வெளியாகியுள்ளது.பேருந்து நடத்துனர் டூ சூப்பர் ஸ்டார் என்ற நிலையை அடைந்த ரஜினி காந்த், தற்போது, ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உருவெடுத்துள்ளார்.
அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க பல இயக்குநர்கள் விரும்பிய நிலையில், அதன் உரிமையை சாஜித் நாதியத்வாலா கைப்பற்றியுள்ளார்.இவர் பல இந்தி திரைப்படங்களை தயாரித்தவர்.ஹவுஸ்புல் என்ற பெயரில் அடுத்தடுத்து 5 சீரியல் திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
இந்த பயோபிக்கில், ரஜினிகாந்த் வேடத்தில் யார் நடிக்க உள்ளார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. படத்திற்கான ஸ்கிரிப்ட் முடிந்த பிறகு, நடிகர்கள் தேர்வு நடைபெறும் என தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த திரைப்படம் 2025ஆம் ஆண்டு திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது…
One Comment