செருப்பு தைக்கும் தொழிலாளியை தொழில் முனைவோராக மாற்றிய ராகுல்!

உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரைச் சேர்ந்த 60 வயதான செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்செட், ‘கடந்த மாதம் டெல்லி ஜன்பத்தில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்திற்கே சென்று சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு தனது கைகளால் செய்யப்பட்ட செருப்புகளை பரிசாக வழங்கினார்.இவரது செருப்பு வடிவமைப்பு திறனை கண்டு ஆச்சரியமடைந்த ராகுல் காந்தி, அவரது தயாரிப்புகளை பிராண்டாக மாற்றும் வகையில், மும்பையைச் சேர்ந்த வடிவமைப்பு கலைஞர் சுதீர் ராஜ்பாரிடம், ராம்செட்டை விமானம் மூலம் அழைத்துச் சென்றுள்ளார்.
சமர் ஸ்டுடியோவிலிருந்து உத்வேகம் பெற்ற ராம்செட் ராஜ்பாரின் தோல் வணிகம் மற்றும் புதுமையான வடிவமைப்புகளால் ஈர்க்கப்பட்டார், மேலும் இந்தப் பயணம் இயந்திர அடிப்படையிலான வடிவமைப்புகளை அறிந்து கொள்ள அவருக்கு உதவிகரமாக இருந்தது.
ராகுல் காந்தியின் இந்த செயல் அவரை செருப்பு தைக்கும் தொழிலாளி என்ற நிலையில் இருந்து தொழில் முனைவோராக மாற்றி இருக்கிறது.இதன் மூலம் அவர் ராம்செட் மோச்சி’ என்ற தனது சொந்த பிராண்டைத் தொடங்கி தனது மகனையும் சேர்த்து இரண்டு மூன்று பணியாளர்களுடன் ஒரு வடிவமைப்பு இயந்திரத்தை வைத்து நிறுவனத்தை தொடங்கியுள்ளார் ராம்சேட். ராகுல்காந்தியின் இந்த உதவி நாடுமுழுவரும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.