அமெரிக்காவில் கெத்து காட்டும் புஷ்பா 2; டிக்கெட் புக்கிங்கில் வரலாற்றுச் சாதனை!

பாலிவுட் ஸ்டார்களே பொறாமைப்படும் அளவிற்கு அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் டிக்கெட் விற்பனை அமெரிக்காவில் புதிய மைல் கல் சாதனையைப் படைத்துள்ளது.
சுகுமாரின் இயக்கத்தில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா, நடிப்பு அசுரன் பகத் ஃபாசில், அனசுயா பரத்வாஜ், சுனில், பிரம்மாஜி மற்றும் ஜெகதீஷ் உள்ளிட்டோர் நடித்த புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் டிசம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. பான் இந்தியா திரைப்படமாக வெளியான இப்படத்தின் முதல் பாகம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
புஷ்பா 2 படத்திற்காக இந்திய ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவில் டிக்கெட் ப்ரீ சேல்ஸ் புதிய உச்சம் தொட்டு அசத்தியுள்ளது. அதாவது ரிலீசுக்கு முன்பே புஷ்பா 2 படத்திற்கு 15 ஆயிரத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படமும் அமெரிக்காவில் இப்படியொரு வரலாற்றுச் சாதனையைப் படைக்கவில்லை என தயாரிப்பாளர்கள் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக புஷ்பா படம் வெளியாகும் திரையரங்குகளில் குளிர்பான கப் மற்றும் பாப்கார்ன் டப்களில் படத்தின் போஸ்டர்கள் இடம் பெறவுள்ளன. இது ரசிகர்களுக்கு மேலும் அலாதியான திரையனுபவத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் விரைவில் புஷ்பா 2 படத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்கவுள்ள நிலையில், அமெரிக்க சாதனை முறியடிக்கப்படுமா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.