இந்தியா
ஆந்திராவில் 8 வயது சிறுமி பலாத்காரம் –13 வயது சிறுவர்கள் குற்றவாளிகள்! பவன் கல்யான் வேதனை!

மாணவர்களுக்கு நமது கலாச்சாரத்தை சொல்லித் தர வேண்டும் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வலியுறுத்தியுள்ளார்.
8 வயது சிறுமியை 12 மற்றும் 13 வயது கொண்ட இளைஞர்கள் பலாத்காரம் செய்த செய்தியை கேட்டு, கடும் அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். அந்தச் சம்பவம் தன்னை மிகவும் பாதித்துவிட்டதாகவும், குற்றவாளிகள் சிறுவர்களாக உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
பல காரணங்களால் சிறுவர்களின் எண்ணங்கள் பாழடைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். பள்ளிக்கூட அளவில் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நமது கலாச்சாரத்தை மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.