வெற்றி அல்லது வீர மரணம் – மேற்குகரையிலும் நடவடிக்கையை தொடங்கிய பாலஸ்தீனியர்கள்!

மேற்குகரையிலும் ராணுவ நடவடிக்கைகளை தொடங்கிய பாலஸ்தீன போராளிகள்…
வெற்றி நிச்சயம், ஒரு போதும் சரணடைய மாட்டோம் என அறிவிப்பு…
காசாவைத் தொடர்ந்து மேற்குகரையில் மாபெரும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக மாபெரும் ராணுவ நடவடிக்கையை பாலஸ்தீன போராளிக்குழுக்கள் அண்மையில் அரங்கேற்றியுள்ளனர். இதில் இஸ்ரேல் படையினர் 17 பேர் தூக்கி எரியப்பட்டு படுகாயம் அடைந்தனர். ஒருவர் கொல்லப்பட்டார். சிலர் உயிர்பிரியும் நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நடவடிக்கை குறித்து மேற்குகரையின் ஹமாஸ் தளபதியான சாஹிர் ஜபரின் தனது கருத்துக்களை லெபனானின் அல் மயாதீன் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் இனப்படுகொலைகளை வேடிக்கை பார்க்கும் இந்த அநியாயக்கார உலகிற்கு புரியும் ஒரே பாஸை “அடி” தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, ஒற்றுமையில் தான் பாலஸ்தீனியர்களின் வெற்றி மறைந்து கிடக்கிறது. இதுவே உண்மை. எங்களுக்கு இரண்டு வழிகள் தான் உள்ளன. ஒன்று சரணடைவது, மற்றொன்று, எதிர்த்து போரிடுவது. நாங்கள் ஒரு போதும் சரணடைய மாட்டோம்.
ச்சயம் எதிர்த்து போரிட்டு வெற்றி பெறுவோம். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸை விட இஸ்ரேல் ஒன்றும் பெரிய வலிமை பெற்ற நாடு அல்ல. அந்த வல்லரசு நாடுகளே போராளிகளிடம் தோற்றுப் போய் உள்ளன. வரலாற்றில் எப்போதும் சர்வதிகாரம் வென்றதில்லை.
பாலஸ்தீனியர்களை தோற்கடிக்க முடியும் என்ற கர்ப்பனையான நம்பிக்கையை இஸ்ரேல் உலக மக்களிடம் விதைத்துள்ளது. அது பொய் என்று நிரூபிக்கப்படும். முழுமையான போர் நிறுத்தம், படைகள் வெளியேற்றம் ஆகியவற்றிற்கு இஸ்ரேல் தயார் என்றால், நாங்களும் பேச்சு வார்த்தைக்கு தயார்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.