மழை பெய்தால் அவ்வளவு தான் – மரண பீதியில் பாகிஸ்தானியர்கள்!

அடி மடியில் கைவைத்த இந்திய அரசாங்கம்…
மரண பீதியில் தூக்கத்தை தொலைத்த பாகிஸ்தானியர்கள்…
பஹல்கம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையிலான உறவில் ஆழமானதுதொரு விரிசல் ஏற்பட்டிருக்கிறது. சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. ஆனால் இது பாகிஸ்தான் விவசாயிகளுக்கு பெரும் துயரை அளிக்கும் அறிவிப்பாக மாறிய இருக்கிறது. பாகிஸ்தானின் தென்கிழக்கு மாகாணமான சிந்துவில் சமீபத்தி ஆண்டுகளில் மழை குறைவாகவே பதிவாகிறது. எனவே ஆண்டின் பெரும்பாலான காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை என்பது அங்கு தொடர் பிரச்சனையாக இருந்து வருகிறது. இங்குள்ள விவசாயிகள் பெரும்பாலும் சிந்துநதியின் நீரையே நம்பி இருக்கும் சூழல் அங்கு நிலவுகிறது.
இந்தியா தண்ணீர் வழங்குவதை நிறுத்திவிட்டால் இந்த இடமே பாலைவனமாக மாறிவிடும். பாகிஸ்தானில் இருக்கும் முக்கிய பிரச்சனையே தண்ணீர் தட்டுப்பாடு தான். தண்ணீர் இல்லை என்றால் அங்கு எதுவுமே செய்ய முடியாது. திபெத்திலிருந்து பாகிஸ்தானின் தெற்கு முனைவரை நீண்டு செல்லும் சிந்து நதி ஏராளமான துணை நதிகளை கொண்டிருக்கிறது. 1960ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே உலக வங்கியின மத்தியஸ்தத்துடன் கையெழுத்திடப்பட்ட நீர் பகிர்வு ஒப்பந்தத்தின் படி, சிந்து செனாப் மற்றும் ஜீலம் நதிகளின் நீரை பாகிஸ்தானும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீரோட்டத்திற்கு எதிர்திசையில் மேல்நிலை பகுதியில் இருக்கும் இந்தியா அந்த நதிகளின் பெரும்பாலான நீரை பாகிஸ்தானுக்கு சுதந்திரமாக பாயவிட வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டது. இந்தியா பாகிஸ்தான் உறவில் இதுவரை எவ்வளவோ விரிசல்கள் இருந்தபோதும் இந்த ஒப்பந்தத்தை பின்வாங்காமல் பாகிஸ்தானுக்கு தேவையான நீரை இந்தியா வழங்கி வந்திருக்கிறது. காஷ்மீரில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதலால் இந்தியா இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
இந்த நதிகளின் 80 சதவீத தண்ணீரை பயன்படுத்தி வந்த பாகிஸ்தானுக்கு இது மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும், அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 25 சதவீத பங்கு வகிக்கும் விவசாயத்ததுறை இதனால் கடுமையாக பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த நதிகள் மூலம் பாகிஸ்தானுக்குள் நுழைஉம் தண்ணீரை இந்தியாவால் ஒரே இரவில் நிறுத்தி வைக்க முடியாது என்றாலும் எதிர்காலத்தில் புதிய அணைகள் கட்டுவதன் மூலமும் நீர்மின் நிலையங்கள் மற்றும் கால்வாய்களை கட்டுவதன் மூலமும் பாகிஸ்தானை சென்றடையும் நீரின் அளவை இந்தியா கணிசமாக குறைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதன் மூலம் வெள்ள அபாயம் ஏற்படும் காலங்களிலும் ஆற்று நீரை திறந்து விடுவது குறித்து பாகிஸ்தானுக்கு முன்னரே அறிவிக்க வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு இல்லை என்பதால், காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் பிராந்தியமான பாகிஸ்தானுக்கு இந்தியாவின் இந்த பதிலடி பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். ஆனால் இதனால் நேரடியாக பாதிக்கப்பட போவது என்னவோ அப்பகுதிகளில் வாழும் அப்பாவி மக்கள்தான் என்ற வருத்தமும் மேலோங்கி நிற்கிறது.