ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார்களுக்கு ஜோடி – இப்போது பரிதாப நிலை! அனைவருக்கும் ஒரு பாடம்!

ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார்களுக்கு ஜோடியாக வலம் வந்தவர். தவறான முடிவுகளால் வாழ்க்கை இழந்து சோகம். விவகாரத்து, புற்று நோயை கடந்து, 53 வயதில் மீண்டும் வாழ்க்கையை தொடங்கும் மனிஷா கொய்ராலா….
நேபாள மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசு தான் நடிகை மனிஷா கொய்ராலா. தமிழில் ரஜினி, கமல்ஹாசன், அர்ஜுனின் முதல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். இந்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு நேபாள தொழில் அதிபர் சாம்ராட் டாஹல் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் அவர்களது இல்லற வாழ்க்கை 2 ஆண்டுகளை தாண்டவில்லை. 2012 ஆம் ஆண்டு விவகாரத்து பெற்று பிரிந்தனர்.
திருமணம் தோல்வியில் முடிந்ததற்கு தான் மட்டுமே காரணம் என்றும், தனது அவசரம் மற்றும் தவறான முடிவு தான் திருமணம் எனத் தெரிவித்திருந்தார். கணவர் மீது எந்த புகாரையும் அவர் கூறவில்லை.இதனிடையே விவகாரத்து பெற்ற சில நாட்களிலேயே அவரை கருப்பை புற்று நோய் தாக்கியது.
அவரால் நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலைக்குச் சென்றார்.ஒரு வழியாக நோயில் இருந்து மீண்ட அவர் மீண்டும் இந்திப் படங்களில் தலைக்காட்ட தொடங்கினார். தற்போது, நெட்பிளக்ஸ் ஓடிடி தளத்தில் மே 1 அன்று வெளியாகியுள்ள ஹீராமண்டி தி டைமன்ட் பசார் வெப் தொடரில் நடித்துள்ளார்.
இதன் பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய மனிஷா கொய்ராலா, 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனது திருமண வாழ்க்கை பற்றி பேசியுள்ளார். மீண்டும் தான் காதலிக்க தயாராகியுள்ளதாகவும், புதிய ஆண் துணை தேவைப்படுவதாக உணர்வதாகவும் கூறியுள்ளார். அப்படி ஒருவர் வந்தால் நல்லது. எனினும் அதற்காக காத்திருந்து நேரத்தை வீணடிக்கப்போவதில்லை. நடக்கும் போது, நடக்கட்டும் என கூறியுள்ளார்.
பணம், புகழ், அந்தஸ்து என எல்லாம் இருந்தாலும், திரையுலக பிரபலங்களுக்கு வாழ்க்கை சரியாக அமைந்து விடுவதில்லை. பலர் அதில் சறுக்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் தான் மனிஷா கொய்ராலா.
ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்த அவர், பிற்காலத்தில் தனக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என அறிந்திருக்க மாட்டார். தற்போது, 53 வயதில் ஒரு ஆண் துணை தேவை என கூறியதன் மூலம் மீண்டும் ஒரு சாதாரண மனிதராக அவர் மாறியுள்ளார். இதற்கு வரவேற்புகள் குவிந்து வருகின்றன.