இந்தியாவின் பணக்கார ஃபுட் யூடியூப்பர் – யார் தெரியுமா?

இன்றைய சோசியல் மீடியா உலகம் சாமானியர்களை செலிபிரிட்டிக்களாக மட்டுமல்ல, கோடீஸ்வரர்களாகவும் மாற்றி வருகிறது. தற்போது 65 வயதிலும் தனது சமையல் வீடியோக்கள் மூலமாக யூடியூப்பில் கோடிகளில் சம்பாதித்து வருகிறார் நிஷா மலிகா.
பொழுது போக்காக இவர் ஆரம்பித்த தற்போது 14.5 மில்லியன் சப்ஸ்கிரைபர்களுடன் முன்னணி சமையல் யூடியூப் சேனலாக மாறியுள்ளது. அதுமட்டுமல்ல இந்தியாவிலேயே பணக்கார பெண் யூடியூப்பர் என்ற அந்தஸ்தையும் பெற்று தந்துள்ளது. ஆம், பிரபல யூடியூபரும் பிரபல உணவு இணையதளத்தின் உரிமையாளருமான நிஷா மதுலிகாவின் சொத்து மதிப்பு ரூ.43 கோடி.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நிஷா நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரை குப்தா என்பவரை திருமணம் செய்ததையடுத்து டெல்லியில் குடியேறினார். ஆசிரியராக பணியாற்றிக் கொண்டே, 2 பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கினார். பிள்ளைகள் வளர்ந்து வேலைக்காக வெளியே சென்றதும், தனிமைக்கு ஆளான நிஷா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
அப்போது அவருக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்த டாக்டர், உங்களுக்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள் என அதுவே உங்களுக்கான மருந்து என அட்வைஸ் செய்துள்ளார். இதையடுத்து சின்ன வயதில் இருந்தே தனக்குப் பிடித்த சமையல் மீது கவனத்தை திருப்பினார். 48 வயதில் கம்யூட்டர் கற்றுக்கொண்டு, இணையத்தில் தனக்கு தெரிந்த சமையல் ரெசிப்பிக்கள் குறித்து எழுத ஆரம்பித்தார். இதற்கு நிஷா எதிர்பார்க்காத அளவிற்கு வரவேற்பும், பாராட்டுகளும் கிடைத்தது. இதனையடுத்து 2011ம் ஆண்டு தனது சொந்த யூடியூப் சேனலைத் தொடங்கினார். அன்று முதல் மாதந்தோறும் 2 கோடி என்ற அளவிற்கு அவருக்கு பார்வையாளர்கள் குவிய ஆரம்பித்தனர். பார்வையாளர்களின் தொடர் வரவேற்பால் 2017ம் ஆண்டு சிறந்த யூடியூப் குக்கிங் கன்டென்ட் கிரியேட்டர் என்ற விருதை வென்றுள்ளார்.
ஆசிரியராக இருந்து இந்தியாவின் பணக்கார பெண் யூடியூபராக நிஷா மதுலிகாவின் பயணம் பலருக்கு உத்வேகம் அளிக்கிறது.