இந்தியா
ஒரு ஆண்டுக்கு கூட தாக்குப் பிடிக்காத மும்பை மெட்ரோ ரயில் நிலையம்!

மும்பையில் பலத்த மழை வெளுத்து வாங்குவதால், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் ஆங்காங்கே சிக்கியுள்ளன.சில இடங்களில் காட்டாற்று வெள்ளம் போல் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.முக்கிய அணைகள், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.இந்நிலையில் ஊடகவியலாளர் குணல் புரோகித் என்பவர் தனது டுவிட்டர் பதிவில், மும்பை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பீச்சிக் கொண்டு கொட்டும் காட்சிகளை வெளியிட்டுள்ளார். இந்த மெட்ரோ ரயில் நிலையில், கடந்த ஆண்டு பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.மும்பை முலுண்ட் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.