நள்ளிரவு தாக்குதல் – தூக்கத்தை தொலைத்த இஸ்ரேலியர்கள்! வரலாற்றில் முதல்முறை!

ஏமன் படைகளின் வான் வழித் தாக்குதலால் இஸ்ரேலில் கடும் கொந்தளிப்பு…
அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்படாமல் முதல் முறையாக மாபெரும் சம்பவம்…
நெதன்யாகு பதவி விலகி, உடனே தேர்தலை நடத்த இஸ்ரேலியர்கள் வலியுறுத்தல்…
ஏமன் ஹவுத்திப் படைகளின் ஆள் இல்லா விமானத் தாக்குதல் இஸ்ரேலில் மாபெரும் அரசியல் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் இஸ்ரேல் அரசியல் தலைவர்களின் கருத்துக்களை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன அவற்றை பார்க்கலாம்.
எல்லாவிதமான தொழில்நுட்பங்களும் நம்மிடம் உள்ளன என பெருமைப்பட்டு வருகிறோம். ஆனால் இந்த தாக்குதலை ஏன் கண்டுபிடிக்கமுடியவில்லை என ஒரு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராணுவ அமைச்சர் கேலண்ட் தூக்கத்தில் இருந்து விழிக்க வேண்டும். ஒட்டுமொத்த இஸ்ரேலும் நள்ளிரவில் விழித்து விட்டது. ராணுவ உளவுத்துறை தலைவர் தயவு செய்து தூக்கத்தில் இருந்து விழிக்க வேண்டும் என மற்றொரு ஆக்கிரமிப்பாளர் வேதனை தெரிவித்துள்ளார்.
New footage shows the Houthi drone attack on Tel Aviv early this morning. pic.twitter.com/aEuF8cjIwU
— Emanuel (Mannie) Fabian (@manniefabian) July 19, 2024
மேலும் போர் வெறியர்களுக்கு எதிராகவும் இஸ்ரேலில் கருத்துருவாக்கம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி குறிப்பிட்ட இஸ்ரேலியர் ஒருவர், நியாயமாக இந்த தாக்குதல், காசா போரை தீவிரமாக நடத்தி வரும் இஸ்ரேலிய வலதுசாரி தலைவர்களின் வீடுகள் மீது தான் நடத்தப்பட்டிருக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு சாதாரண மக்களின் வலி தெரியும் என கூறியுள்ளார்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ஊடகங்களும் இந்தத் தாக்குதலை கடுமையாக சாடியுள்ளன. இதுபற்றி எழுதியுள்ள ஒரு ஆக்கிரமிப்பு ஊடகம், இந்த தாக்குதல் நடத்தப்பட்டது ஏதோ ஒரு எல்லைப்புற நகரத்தில் அல்ல. தலைநகரின் மையப்பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு மிக அருகில் நடந்துள்ளது. கடலில் அவர்களின் விமானம் வரும் போதும் கண்டறியப்படவில்லை. வானிலும் அவர்களது இலக்கை ராடார் கருவியால் கண்டறிய முடியவில்லை.
தரையில் இருந்து குறுகிய உயரத்தில் பறக்கும் போதும் கண்டறியப்படவில்லை. இது எவ்வளவு மோசமான தோல்வி என ஒரு இஸ்ரேல் ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதே போல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசியல்வாதிகள் பலரும், நெதன்யாகு உடனடியாக பதவி விலகி தேர்தலை அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
=====