சினிமா

ஆரோக்கியத்துடன் மம்முட்டி – புற்றுநோய் என வதந்தி!

நடிகர் மம்முட்டிக்கு புற்றுநோய் என வதந்தி பரப்பி ஊடகங்கள்…அவர் முழு உடல்நலத்துடன் உள்ளதாகவும் மம்முட்டி அலுவலகம் விளக்கம்…ரம்ஜான் நோன்பிருந்து வருவதால், படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவில்லை என தகவல்…
மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டி, கடந்த சில நாட்களாக படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவில்லை என்றும், அவருக்கு பெருங்குடல் புற்று நோய் இருப்பதாகவும் ஊடகங்கள் வதந்தி பரப்பின.இந்த நிலையில், இதுகுறித்து மம்முட்டி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அவர்கள் கூறியுள்ளதாவது, மம்முட்டிக்கு புற்று நோய் என்பது முற்றிலும் வதந்தி. அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார்.

தற்போது, ரம்ஜான் மாதம் என்பதால், அவர் நோன்பு நோற்று, இறைவணக்கத்தில் ஈடுபட்டு வருகிறார். ரம்ஜான் முடிந்து அவர் மீண்டும் வேலைக்குத் திரும்புவார். இயக்குநர் மகேஷ் நாராயணனின் படத்தில் நடிக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மகேஷ் நாராயணன் மாலிக் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.தற்போது எம்எம்எம்என் என பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்குகிறார். இதில் மம்முட்டியுடன் 16 ஆண்டுகளுக்கு பிறகு மோகன்லால் இணைகிறார். இந்தப் படத்தில் நயன்தாராவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button