பிரேமலு படத்திற்காக மமிதா பைஜு வாங்கிய சம்பளம்?

சில லட்சம் சம்பளத்தில் வாழ்க்கையை தொடங்கிய மமிதா பைஜு. பிரேமலு மூலம் அடித்த ஜாக்பாட். ஒரே படத்தில் உச்சம் தொட்ட சம்பளம்…
வெறும் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான மலையாள படம் பிரேமலு, தற்போது, 136 கோடி ரூபாயை அள்ளியது. இதனால் ஒரே நாளில் ஒபாமா ஆகியுள்ளார் மலையாள நடிகை மமிதா பைஜு. படத்தின் ஹீரோவை விட, இவரது கேரக்டர் அதிகம் பேசப்பட்டுள்ளது.தமிழில் அண்மையில் வெளியான ஜி.வி. பிரகாஷின், ரிபல் படத்தில் நாயகியாக இவர் நடித்தாலும், அதிகம் கவனம் பெறவில்லை.
அடுத்ததாக தமிழில் விஷ்னு விஷாலுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். தெலுங்கு படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனிடையே இவர் இதுவரை வாங்கிய சம்பளம் எவ்வளவு, பிரேமலு படத்தில் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஏற்கனவே பல மலையாளப் படங்களில் இவர் நடித்திருந்தாலும், சம்பளம் லட்சத்தில் தான் இருந்தது.
அதிகபட்சமாக பிரேமலு படத்திற்காக 30 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். படம் பட்டையை கிளப்ப, தயாரிப்பு நிறுவனத்தை அணுகி கூடுதல் சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நிறுவனம் கூடுதலாக 20 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். இன்னும் கூடுதலாகவே கொடுத்திருக்கலாம். காரணம் வசூல் அப்படி.
இந்நிலையில் அடுத்து வரும் படங்களில் கோடிகளை தாண்டி இவர் சம்பளம் கேட்க உள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவர் தந்தைக்கு மகளாக பிறந்த பைஜு, பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, இப்போது, பி.எஸ்.சி. படித்து வருகிறார்.
22 வயதே ஆன நிலையில், இந்திய திரையுலகை தன் பக்கம் திருப்பியுள்ளார். ஒரு ரவுண்டு வந்து முடிப்பதற்குள் பெரிய கோடீஸ்வர நடிகையாக உருவெடுப்பார் என நம்பப்படுகிறது.