வாழ்க்கை தான்… தங்க கிண்ணத்தில் ஹாட் பாட் நூடுல்ஸ் ருசிக்கும் சீனப்பெண்…!

வாழ்க்கையில் ஒருமுறையாவது வெள்ளி தட்டில் சாப்பிட்டு விடமாட்டோமா? என்ற ஏக்கம் நடுத்தர மக்கள் பலருக்கும் இருக்கும். ஆனால் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகும் ஒரு வீடியோவோ காண்போரை ஏக்கப்பெருமூச்சு விட வைத்துள்ளது. தெற்கு சீனாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஃபேமஸ் உணவான ஹாட் பாட்டை ரசித்து ருசித்து சாப்பிடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு காரணம் அந்த பெண் சாப்பிட்டுக்கொண்டிருப்பது தங்கத்தால் ஆன பாத்திரத்தில். ஆமாங்க, ஆமா 1 கிலோ எடையுள்ள தங்க கிண்ணத்தின் மதிப்பு 70,000 யுவான்கள் அதாவது இந்திய மதிப்பில் 84 லட்சம் ரூபாயாகும்.
வீடியோவில் இருக்கும் பெண்மணி ஷுய்பேயில் இரண்டு தங்க நகைக்கடைகளை நடத்தி வருகிறாராம். ஆனால் இந்த தங்கப் பாத்திரம் அவர் சாப்பிட தயாரிக்கப்படவில்லை. இந்த அரிதான தங்கப் பாத்திரத்தை யாரோ ஒரு கோடீஸ்வர கஸ்டர் செய்து தரும் படி ஆர்டர் கொடுத்துள்ளார். அவர்களிடம் அனுமதி வாங்கியப் பிறகே, அதில் ஹாட் பாட் சாப்பிடுவது போல வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
சரி, தங்கப் பாத்திரத்துல சாப்பிட்டீங்களே டேஸ்ட் எப்படி இருந்துச்சு அம்மணி என இணையவாசிகள் கேட்டால், தங்கப் பாத்திரம் என்பதால் உணவு வேகமாக சூடாகிறதோ தவிர சுவை எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கு என அலுத்துக் கொண்டுள்ளார்.