உலகம்

துணை ஜனாதிபதியை ஓரங்கட்டும் எலான் மஸ்க்..

இந்த நடவடிக்கைக்கு பின்னால் எலான் மஸ்க்கின் பங்கு பெருமளவு இருந்ததாக கூறப்படுகிறது.டிரம்பின் இந்த நடவடிக்கை குறித்து எலான் மஸ்க் இது சாதாரண “காமன் சென்ஸ்” நடவடிக்கை என்று விவரித்துள்ளார்.”மேக் அமெரிக்கா கிரேட் அகைன்” என்ற வாசகத்துடன் உள்ள தொப்பியை அணிந்துகொண்டு ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் -எலான் மஸ்க் கூட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தியதன் மூலம் அவர்களது உறவு நெருக்கமாக வளர்ந்துள்ளதாக தெரிய வருகிறது.எலான் மஸ்கின் செல்வாக்கு கட்சிக்குள் அதிகரித்ததால், துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் ஓரங்கட்டப்பட்டதாகவே தெரிகிறது.

ஜே.டி.வான்ஸ் பாரிஸ் AI உச்சி மாநாட்டில் பங்கேற்ற நிலையில், டிரம்ப் மற்றும் மஸ்க் வெள்ளை மாளிகையில் விவாதங்களில் ஈடுபட்டிருந்தனர்.இது மஸ்கின் அரசியல் எதிர்காலம் பற்றிய பல ஊகங்களுக்கு வழி வகுத்துள்ளது, சிலர் அவரை ஒரு சாத்தியமான எதிர்கால அமெரிக்கா ஜனாதிபதியாகவே கற்பனை செய்கின்றனர். அமெரிக்காவில் துணை ஜனாதிபதியே எதிர்கால ஜனாதிபதியாக கருதும் நிலையில் எலான்‌ மஸ்க்கின் வளர்ச்சி அதை மாற்றி அமைத்திருக்கிறது. இதனால் ஜே.டி.வான்ஸ்-ன் அரசியல் எதிர்காலம் குறைவாகவே தெரிகின்றது.

மேலும் டிரம்ப் அவரை தனது அரசியல் வாரிசாக அங்கீகரிக்க உறுதியளிக்கவில்லை, இதனால் அமெரிக்க அரசின் நிர்வாகத்தில் ஜே.டி.வான்ஸின் பங்கு எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.. அமெரிக்காவில் ஒருவர் இரு முறை மட்டுமே ஜனாதிபதியாக இருக்க முடியும், டிரம்பிற்கு இது இரண்டாவது முறை என்பதால் இன்னும் நான்கு ஆண்டுகளில் குடியரசு கட்சி அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button