கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் புதிய அலுவலகம் – இன்டீரியர் டிசைனர் கவுரி கான்!

சாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய அலுவலகம்…
அற்புதமாக இண்ட்டீரியர் செய்து அசத்தியுள்ள மனைவி கவுரி கான்…
3 முறை ஐ.பி.எல். போட்டிகளை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் சாருக்கான்.
இவரது மனைவி கவுரி கான், தற்போது, புதிய அலுவலகத்திற்கான இண்ட்டீரியர் வேலைகளை முடித்து விட்டு, அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. கொல்கத்தா அணியின் அலுவலகம் அந்த அணியின் தீம்மை பிரதிபலிக்கும் வகையில், வெள்ளை, ஊதா மற்றும் தங்கத்தின் சாயலைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இண்ட்டீரியர் டிசைனரான கவுரி கான் கடந்த ஆண்டு மும்பையில் உணவு விடுதி ஒன்றைத் தொடங்கினார்.
அதன் இண்ட்டீரியர் வேலைகளை அவரே செய்து, அதன் புகைப்படங்களை வெளியிட்டார். இது சாருக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பஞ்சாபி பிராமண குடும்பத்தைச் சேர்ந்த கவுரி கான், 1991 ஆம் ஆண்டு சாருக்கானை காதல் திருமணம் செய்து கொண்டார்.
திரைத்துறையில் எவ்வளவு உச்சத்திற்கு சென்றாலும், மனைவியை மட்டுமே இன்றும் காதலித்து, முன்னுதாரணமாக வாழ்ந்து வருபவர் சாருக்கான். காதல் மன்னனான சல்மான்கானைப் போல, ஆண்டுக்கு ஒரு முறை காதலிகளை மாற்றாதவர் சாருக்கான்.
சாருக்கான் – கவுரி கான் தம்பதிக்கு ஆர்யன் கான், சுஹானா கான், அப் ராம் ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இதில் கடைக்குட்டியான அப் ராம் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
====