உலகம்

ICC முன்பு மண்டியிட்ட நெதன்யாகு – கைது நடவடிக்கையை நிறுத்துமாறு கெஞ்சல்!

ICC முன்பு மண்டியிட்ட நெதன்யாகு - கைது நடவடிக்கையை நிறுத்துமாறு கெஞ்சல்! சர்வதேச நீதிமன்றத்தால், தன்னை ஒன்றும் செய்ய முடியாது என சவடால் விட்டிருந்த நிலையில், தற்போது பதுங்கல்…

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோருக்கு எதிரான கைது வாரண்டை எதிர்த்து, முதல் முறையாக இஸ்ரேல் முறைப்படி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு தங்களது சட்ட எல்லைக்குள் வருகின்றதா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் காசாவில் ஆக்கிரமிப்பு படைகள் நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்த விசாரணையை நிறுத்தி வைக்குமாறும் சர்வதேச நீதிமன்றத்தை இஸ்ரேலின் டெபுடி அட்டார்னி ஜெனரல் கிலாட் நோஅம் தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

காசாவில் சுமார் 53,000 மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்டிற்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக் கொள்ளும் நாடுகளுக்கு சென்றால், நெதன்யாகு கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டது.

சில ஐரோப்பிய நாடுகள், நெதன்யாகு வந்தால் கைது செய்வோம் என அறிவித்தன. சில நாடுகள் கைது செய்ய மாட்டோம் என அறிவித்தன. எனினும், எப்போதும் கைது பயத்துடன் நடமாடும் சூழல், பயங்கரவாதி போர்க்குற்றவாளி, நெதன்யாகுவிற்கு ஏற்பட்டது.
சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரிப்பதாக வீராப்பு பேசி வந்த இஸ்ரேல், தற்போது, அடிபணிந்து, மனு அனுப்பும் வேலையில் இறங்கி இருப்பது, அந்நாட்டின் பின்னடைவை காட்டுவதாக அமைந்துள்ளது.

இதனிடையே காசா விவகாரம் தொடர்பாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், பல புதிய கைது ஆணைகளை பிறப்பித்துள்ளதாகவும், யாருக்கு எதிராக அவை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை ரகசியமாக வைத்துள்ளதாகவும் கார்டியன் பத்திரிக்கை ஏப்ரல் மாதம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த புதிய கைது ஆணைகள் குறித்து, ஐசிசியின் நீதிபதி கரீம் கான், எந்த தகவலையும் வெளியிட கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பத்திரிக்கை செய்தி தெரிவித்துள்ளது.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button