மும்பையில் ரூ.20 கோடிக்கு சொகுசு வீடு வாங்கிய கே.எல். ராகுல்! 10 ஆண்டுகளுக்குள் 100 கோடி சொத்து!

20 கோடி ரூபாய்க்கு சொகுசு வீடு வாங்கிய கே.எல்.ராகுல்…
100 கோடி ரூபாயை தாண்டிய சொத்து மதிப்பு…
இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் முழுமையாக நிறைவடைவதற்குள், 100 கோடி ரூபாய் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார் கே.எல். ராகுல்.
கிரிக்கெட் வீரர்கள், FOUR. SIX என அடிக்க அடிக்க அணியின் ஸ்கோர் மட்டுமல்ல, அவர்களின் சொத்து மதிப்பும் அதிரடியாக உயர்ந்து விடுகிறது. அந்த வகையில் மிக விரைவில் கோடிகளை குவித்த வீரர்கள் வரிசையில் கே.எல். ராகுலும் இடம்பிடித்துள்ளார்.
A கேட்டகிரி வீரரான 32 வயதே ஆன கே.எல். ராகுல் பிசிசிஐ மூலம் ஆண்டுக்கு 20 முதல் 22 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.
ஐ.பி.எல். போட்டிகளில் தொடர்ந்து கோடிகளை குவித்து வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு லக்னோ அணி இவரை 17 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் இதுவரை இவர் 87 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.
போதா குறையாக, Bharat Pe, Puma, Realme போன்ற பிராண்ட் விளம்பரங்களில் நடித்துள்ளார். ஒரு நாள் விளம்பர படப்பிடிப்புக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார். பெங்களூருவில் சொகுசு வீடு வைத்துள்ள கே.எல். ராகுல், கோவாவில் 7000 சதுர அடியில் வில்லா ஒன்றையும் வைத்துள்ளார்.
மேலும் Land Rover Defender 110, Range Rover Velar, Lamborghini Huracan Spyder, Audi R8, and BMW X5 உள்ளிட்ட சொகுசுக் கார்களையும் வைத்துள்ளார். ஆனந்த் அம்பானியை போன்று கைக்கடிகாரங்கள் மீது ஆர்வம் கொண்ட இவர், 18-carat rose gold Rolex Sky-Dweller வாட்ச் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் மதிப்பு 38 லட்சம் ரூபாய்.
இந்த நிலையில் தான் தற்போது, அவர் மும்பையில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களின் வீடுகள் உள்ள பாலி ஹில்ஸ் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில் 3350 சதுர அடி கொண்ட வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இதற்காக 1 கோடியே 20 லட்சம் ரூபாய் ஸ்டாம்ப் டியூட்டி கட்டியுள்ளார்.
நடிகை அதியா ஷெட்டியை திருமணம் செய்து கொண்ட கே.எல். ராகுல், கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர். இவரது மாமனார் பிரபல நடிகர் சுனில் ஷெட்டி. கே.எல். ராகுலின் தாய் தந்தை இருவருமே பேராசிரியர்கள் ஆவர்.
====