முக்கிய நடவடிக்கை – வீடியோ வெளியீடு!

இஸ்ரேல் படைகளுக்கு எதிராக நடவடிக்கை…
ஹமாஸ் வெளியிட்ட நேரடி வீடியோ…
ஹமாசின் ராணுவ பிரிவான அல் கஸ்ஸாம் படை, வெளியிட்டுள்ள வீடியோ இஸ்ரேலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு காசா பகுதிகளை பிரிக்கும் நெட்சரிம் காரிடர் என்ற பகுதியை கடந்த 10 மாதங்களாக இஸ்ரேல் கைப்பற்றி வைத்துள்ளது. இந்த நிலையில், அங்கு நடமாடிக் கொண்டிருந்த இஸ்ரேல் ராணுவ வாகனங்களை குறிவைத்து, கஸ்ஸாம் படை நடத்தியது.
இந்த தாக்குதல் காட்சிகளை தெளிவாக படம் பிடித்துள்ள ஹமாஸ் அதனை தற்போது, வெளியிட்டுள்ளது. சுமார் 4 நிமிடம் ஓடக் கூடிய அந்த வீடியோவில், ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் ராணுவ வாகனங்களை குறிவைத்து, சாலையோரம் வைக்கும் கன்னி வெடி வெடித்துச் சிதறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இஸ்ரேல் படை மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தும் காட்சிகளையும் வெளியிட்டுள்ளனர்.
ஹமாஸ் நடத்திய இந்தத் தாக்குதலில் தங்கள் தரப்பில் மேஜர் அந்தஸ்தில் உள்ள இரண்டு ரிசர்வ் படை அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ஆக்கிரமிப்பு ராணுவம் அறிவித்துள்ளது.
⚡️Al-Qassam Brigades: Yesterday, 4 fighters from Al-Qassam Brigades successfully infiltrated the Netzarim corridor, where dozens of Zionist soldiers were stationed. They blew up two military jeeps and detonated anti-personnel IEDs, killing and wounding the Zionist force. pic.twitter.com/PxxUUwaN1S
— Warfare Analysis (@warfareanalysis) August 18, 2024
====