ஆட்டை வைத்து உலக சாதனை படைத்த கேரள விவசாயி…!

கின்னஸ் சாதனை புத்தகத்தில் உலகிலேயே மிகவும் சிறிய, பெரிய விஷயங்கள் பல இடம் பிடித்து பார்த்திருப்போம். இன்று உலகிலேயே மிக,மிக குள்ளமான ஆடு ஒன்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளது. கேரள விவசாயியான பீட்டர் லெனு தான்தான் வளர்க்கும் ஆடுகள் சாதாரண ஆடுகளை விட உயரம் குறைவான இனத்தைச் சேர்ந்தது என்பது நன்றாகத் தெரியும். ஆனால் பல விதமான ஆடுகளுடன் தனது ஆட்டை கம்பேர் செய்து பார்த்த போது தான், அவருக்கு ஒரு யோசனை வந்தது. அதாவது நாம் செல்லமாக வளர்க்கும் ஆட்டின் பெயரில் ஏன் ஒரு கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கக்கூடாது என்பது தான் அது.
பீட்டரின் இந்த யோசனை மோசம் போகவில்லை, அவர் எதிர்பார்க்காதவிதமாக உலகிலேயே குள்ள ஆடு என்ற சாதனையை அவர் ஆசை, ஆசையாய் வளர்த்து வரும் கரும்பி என்ற உயரம் குறைந்த பெண் ஆடு பெற்றுள்ளது. 4 வயதாகும் இந்த ஆடு 1 அடி 3 அங்குலம் மட்டுமே உள்ளது. அதாவது இந்த ஆட்டின் உயரம் 40.50 சென்டி மீட்டர் மட்டுமே ஆகும். மரபணு ரீதியாகவே உயரம் குறைவாக வளரக்கூடிய இந்த ஆடு சராசரியாக 1.8 அடி வரை வளருமாம். ஆனால் கரும்பி வழக்கத்தை விடவும் குறைவாக 1.3 அடியாக உள்ளதே இந்த சாதனைக்கு காரணம்.