விந்து உற்பத்தி அதிகரிப்பு முதல் ஹேர் ஃபால் வரை ஆண்களுக்கான இயற்கை லேகியம் ஆச்சர்யமூட்டும் மருத்துவ குணங்கள்… இனி இந்த மீனை மிஸ் பண்ணிடாதீங்க…
பார்க்க ஒரு மாதிரியா இருக்கு இதுவேண்டாம் என கனவா மீனை ஒதுக்குவோர் ஏராளம். ஆனா அதில் இருக்குற மருத்துவ விஷயங்கள தெரிஞ்சிக்கிட்டீங்கன்னா இனி கனவா மீன் சாப்பிடுறத மிஸ் பண்ணவே மாட்டீங்க

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான கனவா மீன் ஏகப்பட்ட மருத்துவ நன்மைகளை தனக்குள் மறைத்து வைத்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?.
பார்க்க ஒரு மாதிரியா இருக்கு இதுவேண்டாம் என கனவா மீனை ஒதுக்குவோர் ஏராளம். ஆனா அதில் இருக்குற மருத்துவ விஷயங்கள தெரிஞ்சிக்கிட்டீங்கன்னா இனி கனவா மீன் சாப்பிடுறத மிஸ் பண்ணவே மாட்டீங்க.
ஒமேகா 3 ஊட்டச்சத்துடன் 90 சதவீதம் காப்பர், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் நிறைந்துள்ளது. ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடைய செலினியம் உள்ளதால் நோய் எதிர்ப்பு மண்டத்திற்கு வலுசேர்க்கிறது. கனவா மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களில் ஏராளமாக உள்ளது, குறிப்பாக DHA மற்றும் EPA அதிகமுள்ளது.
இது மூளை வளர்ச்சி, இருதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. கனவா மீனில் காணப்படும் கால்சியம் வலுவான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் உதவுகிறது.
புரதம் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருப்பதால், கனவா மீன் வெயிட் லாஸ் செய்ய நினைப்பவர்களுக்கு வரப்பிரசாதமாகும்.
ஸ்க்விட் எனப்படும் இந்த கனவா மீன் ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது, அவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாத்து நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. உடலில் ஏற்படும் அலர்ச்சிகளையும் தடுக்கும், தலைமுடி வளர்ச்சிக்கும் உதவும்.
வைட்டமின் பி1, பி2, பி3, ஏ, டி, இ, கே போன்ற வைட்டமின் சத்துக்கள் உள்ளதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவினை அதிகரிக்க விடாமல் சீராக வைத்திருக்கும். பாதரசம் குறைவாக உள்ளதால் கர்ப்பிணிகள் முதல் அனைத்து தரப்பு மக்களும் சாப்பிடக்கூடிய மீனாக உள்ளது.
அதுமட்டுமின்றி, ஆண்மை அதிகரிப்பிற்காக லேகியங்களை தேடி அலைபவர்களுக்கும், தீர்வை கொடுக்கிறது கனவா மீன். ஆண்மை குறைபாடுகளைத் தடுப்பதிலும், விந்து உற்பத்தியை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.