நெதன்யாகுவின் நிகழ்ச்சியை புறக்கணித்த கமலா ஹாரிஸ்! இஸ்ரேல் அதிர்ச்சி!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும் நெதன்யாகு…
கூட்டத்தை புறக்கணித்துள்ள கமலா ஹாரிஸ்…
கடும் ஏமாற்றம் தருவதாக இஸ்ரேல் கருத்து…
அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரை நிகழ்த்துகிறார். இது அமெரிக்காவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் சுமார் 40 ஆயிரம் பெண்கள், குழந்தைகளை கொன்று குவித்தவருக்கு எப்படி நாடாளுமன்றத்தில் பேச அனுமதி வழங்கப்பட்டது என்ற கேள்வி அமெரிக்காவில் பலமாக எழுந்துள்ளது.
இதனை புறக்கணிப்பதாக பல அரசியல்வாதிகள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், நெதன்யாகு உரையாற்றும் நிகழ்ச்சியில், ஜனநாயக கட்சியின் முன்னணி அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் கலந்து கொள்ள மாட்டார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. அவர் இண்டியாபோலிஸ் நகரத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் வியாழக்கிழமை நெதன்யாகுவை, கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, இஸ்ரேல் தன்னை பாதுகாத்துக் கொள்ள அதற்கு உரிமை உள்ளது.
அதே நேரம் இஸ்ரேல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், அதற்கு உடனடி தீர்வு போர் நிறுத்தம் தான், காசாவில் முழு அளவில் நிவாரணங்கள் சென்றடைய வேண்டும், காசா மக்களுக்கு சுய நிர்ணய உரிமை உள்ளது, இரு நாடுகள் கொள்கை தான் தீர்வு உள்ளிட்ட விசயங்களை அவர் வலியுறுத்துவார் என கமலா ஹாரிசின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப், யூதர்களுக்கான ஒரே கட்சி தனது கட்சி தான் என பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். நெதன்யாகுவை, சந்திக்க, கமலா ஹாரிஸ் மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
=====