ஹமாஸ் பதிலடிக்கு 14 ஆக்கிரமிப்பு படை வீரர்கள் பலி

தெற்கு காசா பகுதியில் ஹமாஸின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் 14 ஆக்கிரமிப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர்.
17 பேர் காயமடைந்தனர். போர்க்களத்தில் இருந்து பல வீரர்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை என்றும் ஆக்கிரமிப்பு படை ராணுவம் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களை இராணுவ ஹெலிகாப்டர்கள் டெல் அவிவில் உள்ள டெல் ஹாஷோமர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. தெற்கு காசா பகுதியில் வீரர்களின் கேரியரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 605வது போர் பொறியியல் பட்டாலியனைச் சேர்ந்த 8 ஆக்கிரமிப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியில் ஒரு வீட்டிற்குள் பதுங்கியிருந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை வீரர்கள் மீதான வெடிகுண்டு தாக்குதலில் சிலர் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.