ஒரு மணி நேரத்தில் ரூ.1000 கோடி செலவு செய்த இஸ்ரேல்!

ஹிஸ்புல்லா தாக்குதலால் வெளியேறிய 1 லட்சம் ஆக்கிரமிப்பாளர்கள்…
குடும்பச் செலவுக்கு 8400 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள இஸ்ரேல்…
ஹிஸ்புல்லா தாக்குதலில் இருந்து தப்ப ஒரு மணி நேரத்தில் 1000 கோடி செலவு செய்தது அம்பலம்…
காசா மீதான தாக்குதலுக்கு பதிலடியாக, லெபனான் எல்லையில், ஹிஸ்புல்லாவும், செங்கடலில் ஏமன் படைகளும் நடத்தி வரும் தாக்குதல்களால் கடும் பொருளாதார நெருக்கடியை நோக்கி இஸ்ரேல் சென்று வருகிறது.
இஸ்ரேலின் வடக்கு எல்லையில், ஹிஸ்புல்லா நடத்தி வரும் தாக்குதல் எதிரொலியாக தொடர்ந்து, 1 லட்சம் ஆக்கிரமிப்பு செட்டிலர்கள் அங்கிருந்து வெளியேறி, இஸ்ரேலின் மத்திய மற்றும் தெற்கு நகரங்களில், விடுதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.
அவர்களது குடும்பத்தின் மாதச் செலவினங்களுக்கு இஸ்ரேல் அரசு கடந்த 10 மாதங்களாக நிதி வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதி வரை அவர்களுக்கு தேவையான நிதியை வழங்குவதற்காக இந்திய மதிப்பில் சுமார் 8000 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்க இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இஸ்ரேல் இந்த தொகையை தற்போது, வழங்குவதால் பெரும் நிதிச்சுமை ஏற்படும் என கருதப்படுகிறது.
இதே போல், ஞாயிற்றுக்கிழமை காலை ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கை என்ற பெயரில், இஸ்ரேல் நடத்தி திடீர் தாக்குதலுக்கு ஒரு மணி நேரத்தில் மட்டும் சுமார் 1000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் வட்டி, ஆயுத தயாரிப்பு, மது உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் மூலம் பணம் கொழிக்கும் நாடாக இருந்து வரும் இஸ்ரேல், அந்த வருவாயை கொண்டு, தாராளமாக இனப்படுகொலைகளை அரங்கேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
====