இஸ்ரேல் ஆயுத கப்பல்களுக்கு அனுமதி வழங்க கூடாது – உலக நாடுகளுக்கு ஐ.நா. வேண்டுகோள்!

இஸ்ரேல் நாட்டின் ஆயுதக் கப்பல் ஒன்று, வியட்நாமில் இருந்து புறப்பட்டு, இஸ்ரேல் நோக்கி சென்று கொண்டுள்ளது. வழியில், எரிபொருள் நிரப்புவதற்கும், ஓய்விற்காகவும், இன்ன பிற தேவைகளுக்காகவும், பல்வேறு நாடுகளில் தங்கிச் சென்று வருகிறது.இவ்வாறு நமீபியா நாட்டு கடல் எல்லைக்குள் சென்ற இஸ்ரேல் கப்பல், அங்கு நங்கூரமிடுவதற்கு அனுமதி கேட்டது. ஆனால் காசாவில் இஸ்ரேல் செய்து வரும் இனப்படுகொலைகளை காரணம் காட்டி, இஸ்ரேல் கப்பலுக்கு அதிரடியாக நமீபியா அனுமதி மறுத்தது.
இந்நிலையில், நமீபியாவின் செயலை பாலஸ்தீனத்துக்கான ஐ.நா. பார்வையாளர் பிரான்சிஸ்கா அல்பனீஸ் பாராட்டியுள்ளார். இது உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணம் என புகழாரம் சூட்டியுள்ளார்.மேலும் இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பிரான்சிஸ்கா அல்பனீஸ் கூறியுள்ளதாவது, #Kathrin என்ற பெயர் கொண்ட ஆயுதக் கப்பல் 8 கண்டெய்னர்களில் விமானங்களில் இருந்து வீசப்படும் குண்டுகள், மிசல்ஸ்களை சுமந்து கொண்டு, போர்ச்சுகள் நாட்டு கொடியுடன் இஸ்ரேலுக்கு சென்று கொண்டுள்ளது. அந்த கப்பலுக்கு அனுமதி மறுத்த நமீபியாவின் செயல் பாராட்டத்தக்கது. தற்போது, அந்த கப்பல் அங்கோலா நாட்டை நோக்கி சென்றுள்ளது. அங்கோலாவும் அனுமதி மறுக்க வேண்டும். இல்லாவிட்டால், போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா.
மாநாட்டு தீர்மானத்தை மீறிய செயலாக கருதப்படும்.போர்ச்சுகள் நாடு, இஸ்ரேல் ஆயுத கப்பலுக்கு உதவி செய்வதன் மூலம் ஐ.நா. தீர்மானத்தை மீறியுள்ளது. சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் விதிகளின்படி, இஸ்ரேலுக்கு உதவி செய்யும் எந்த ஒரு நாடும், போர்குற்றத்திற்கு உடந்தையாக உள்ளதாக கருதப்படும் என தெரிவித்துள்ளார்.ஆப்ரிக்க ஏழை நாடான நமீபியா, தனது துணிகர முடிவின் மூலம் உலக நாடுகளின் பாராட்டை பெற்றுள்ளது. அதே நேரம் பல சன்னிப்பிரிவு முஸ்லீம் அரபு நாடுகள் இஸ்ரேல் கப்பல்கள் நங்கூரமிட தொடர்ந்து அனுமதி அளித்து வருகின்றன