உலகம்

இஸ்ரேல் ஆயுத கம்பெனியில் ரூ. 84,000 கோடி முதலீடு செய்யும் ஐக்கிய அரபு அமீரகம்!

இஸ்ரேல் நிறுவனங்களில் 84,000 கோடி ரூபாய் முதலீடு…
விரைவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைய உள்ள 1000 இஸ்ரேல் நிறுவனங்கள்…

காசாவில் இஸ்ரேல் மாபெரும் இனப்படுகொலைகளை அரங்கேற்றி வரும் நிலையில் உலகின் பல ஜனநாயக நாடுகள் இஸ்ரேல் உடனான உறவுகளை தொடர்ந்து துண்டித்து வருகின்றன. ஆனால் சன்னிப்பிரிவு மன்னர் ஆட்சி நாடான ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் ராணுவத்துக்கு ஆயுதம் தயாரிக்கும் நிறுவனத்தில் பெரும் முதலீடுகளை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி பிரஸ் டிவி வெளியிட்டுள்ள செய்தியில், இஸ்ரேல் உடன் உறவுகளை இயல்பாக்கும் அமெரிக்காவின் திட்டமான ஆபிரஹாம் ஒப்பந்தத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகம் கையெழுத்திட்டது.
அதன் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் Edge Group இஸ்ரேலின் Israel Aerospace Industries நிறுவனத்துடன் இணைந்து ஆள் இல்லா ராணுவ படகுகளை உருவாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இது மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தின் G42 நிறுவனம் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ராணுவத்துக்கு ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டு வரும் Rafael Advanced Defense Systems நிறுவனத்தில் பங்குகளை வாங்கி முதலீடு செய்வதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.

இந்த நிறுவனம் துபாய் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரும், அமீரக தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான தஹ்னூன் பின் சயீத் அல் நஹ்யான் (Tahnoun bin Zayed Al Nahyan) என்பவரின் தலைமையில் இயங்கி வருகிறது.
இஸ்ரேல் – அமீரக உறவு குறித்து UAE-Israel Business Council துணைத் தலைவர் Dorian Barak, கூறும்போது, விரைவில் அரபு மண்ணில் 1000 இஸ்ரேலிய நிறுவனங்கள் கால் ஊன்றும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு உதாரணமாக எல்பிட் சிஸ்டம் நிறுவனத்தை குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலைச் சேர்ந்த இந்த நிறுவனம், அமீரகத்தில் Elbit Systems Emirates என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் அமீரகம் முதலீடு செய்துள்ளது. இந்த நிறுவனம், இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளுக்கு தேவையான ஆயுதங்களை இணைந்து தயாரிக்கிறது. இஸ்ரேலின் Tamar கேஸ் பீல்டு நிறுவனத்தில் அமீரக அரசுக்கு சொந்தமான Mubadala நிறுவனம் 11 சதவீதம் முதலீடு செய்துள்ளது.

அமீரகத்தின் இதே Mubadala நிறுவனம் டெல் அவிவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இஸ்ரேலின் மற்றொரு நிறுவனமான Pintango வில் முதலீடுகளைச் செய்துள்ளது. இந்த Pintango நிறுவனம் இஸ்ரேல் முன்னாள் பிரதமர் Shimon Peres இன் மகன் Chemi Perez ஆல் நிறுவப்பட்டது.

இஸ்ரேல் முன்னாள் ராணுவத் தளபதி Moshe Ya’alon என்பவரை தலைவராக கொண்ட, ராணுவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் Synaptech நிறுவனத்திலும் ஐக்கிய அரபு அமீரகம் முதலீடு செய்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் உழைப்பின் மூலம் வளர்ந்த ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேலில் பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button